61 இறுதி பகுதி

2.2K 83 22
                                    


61 இறுதி பகுதி

எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பயங்கர கோபத்தில் இருந்தாள் பூங்குழலி. அவளது பிறந்த நாளை எப்பொழுதும் மறக்க மாட்டேன் என்று மலரவன் கூறவில்லையா? அப்படி இருக்கும் போது, எப்படி அவன் அவளது பிறந்த நாளை மறந்தான்? அவர்களது நிகழ்ச்சிக்கான தேதி வெளியிடப்பட்ட நாளிலிருந்து அவன் அதைப் பற்றி பேசுவான் என்று அவள் எதிர்பார்த்து இருந்தாள். ஆம், அவளது பிறந்தநாள் அன்று தான் அவர்களது நிகழ்ச்சிக்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது. மலரவன் அது குறித்து ரியாக்ட் செய்யவே இல்லை. அதைப்பற்றி அவனிடம் கேட்க வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் தயக்கத்துடன் இருந்து விட்டாள். அதே நேரம், அவளுக்கு அவன் மீது கோபமாகவும் இருந்தது. அவளிடம் காதலை வெளிப்படுத்தும் முன், அவளிடம் கொடுக்க முடியாது என்று தெரிந்த பின்பும், அவளுக்காக அவ்வளவு பரிசுப் பொருட்களை வாங்கி வைத்திருந்தான் அவன். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, அவளது பிறந்த தேதி கூட அவனுக்கு ஞாபகம் இல்லை. திருமணத்திற்கு பிறகு எல்லா ஆண்களும் இப்படித்தான் மாறி போவார்களோ?

ஒருவேளை நிகழ்ச்சியின் பரபரப்பில் அவன் அதை மறந்திருக்கலாம். தன்னை தானே தேற்றிக் கொண்டாள் பூங்குழலி.

அப்பொழுது அவளது பெயரை கூறி அழைத்தபடி உள்ளே ஓடி வந்தான் மலரவன்.

"பூங்குழலி...."

கட்டிலை விட்டு எழுந்து நின்றாள் பூங்குழலி.

"நீ இன்னுமா ரெடியாகாம இருக்க? நமக்கு டைம் ஆகுது. சீக்கிரம் ரெடி ஆகு" என்று பரபரத்தான்.

அலமாரியின் கதவை திறந்து, அதிலிருந்த ஒரு காகித பையை எடுத்து அவளிடம் நீட்டினான்.

"இதை போட்டுக்கிட்டு ரெடியாகு" என்று அதை அவளிடம் கொடுத்தான்.

அந்தப் பையில் இருந்த உடையை எடுத்து பார்த்த பூங்குழலி அதிர்ச்சி அடைந்தாள். அது ஒரு கடல் கன்னி வகையான உடை. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்தது. அது, அவளுடைய மனதை, பார்த்த உடனேயே கொள்ளை கொண்டது. அதில் நிச்சயம் அவள் ஒரு அப்சரஸ் போன்று இருப்பாள் என்பது நிச்சயம். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த உடையை அவளுக்கு எதற்காக கொடுக்கிறான் மலரவன் என்று தான் அவளுக்கு புரியவில்லை. அவள் தான் திருமதி மலரவன் ஆயிற்றே...!

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora