5 எவ்வளவு மகிழ்ச்சியானவள்

2.6K 87 7
                                        

5 எவ்வளவு மகிழ்ச்சியானவள்

பூங்குழலியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள் மணிமாறனும் மலரவனும். அவள் இன்னும் மயக்க நிலையில் தான் இருந்தாள். அவளை பரிசோதித்த மருத்துவர்,

"இவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகியிருக்காங்க. ரொம்ப வீக்காகவும் இருக்காங்க. அவங்களுக்கு நான் இன்ஜெக்ஷன் போடுறேன். அவங்களை நல்லா சாப்பிட வைங்க
 சரியாயிடுவாங்க" என்றார்.

"இந்த இன்ஜெக்ஷன் எதுக்காக டாக்டர்?" என்றான் மலரவன்.

"அவங்களோட மயக்கத்தை தெளிவிக்க"

"அப்படின்னா அந்த இன்ஜெக்ஷனை அவங்களுக்கு போடாதீங்க டாக்டர்" என்ற மலரவனை மருத்துவரும், மணிமாறனும் விசித்திரமாய் பார்த்தார்கள்.

"அவங்க எதுவுமே சாப்பிடாம இருக்காங்க. இதுக்கு பிறகும் நிச்சயம் சாப்பிட மாட்டாங்க. நீங்க மயக்கத்தை தெளிவிசிட்டா, அதுக்கப்புறம் அவங்க தூங்கவும் மாட்டாங்க. மாறா, அழ ஆரம்பிச்சிடுவாங்க. அவங்க அப்பா இறந்துட்டாரு டாக்டர்..."

"ஓ..."

"அவங்களுக்கு எனர்ஜி வேணும். நீங்க அவங்களுக்கு ஒரு ஸலைன் போட்டிங்கன்னா பெட்டரா இருக்கும்"

"சரி, அப்படியே செஞ்சிடலாம். அந்த ஸலைன் முடிய நேரம் ஆகும். அது   வரைக்கும் அவங்க தூங்கட்டும்"

"தேங்க்யூ டாக்டர்"

ஒரு செவிலியை அழைத்த மருத்துவர், பூங்குழலிக்கு ஸலைன் ஏற்றச் சொல்லி உத்தரவிட்டு நகர்ந்தார்.

"மலரா, நான் குழலியோட இருக்கேன் நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு"

"நான் ஃபிளைட்ல வரும் போது தேவையான ரெஸ்ட் எடுத்துட்டேன். நீங்க வீட்டுக்கு போய் ஏதாவது சாப்பிடுங்க. நீங்க மாத்திரை போடணும் இல்ல? நான் மகிழனை வரச் சொல்லி குழலியோட இருக்க சொல்லிட்டு அப்புறம் வறேன்"

"சரி, நான் வீட்டுக்கு போயிட்டு, காரை அனுப்பி வைக்கிறேன்"

"சரி பா... உங்களை இன்னொரு விஷயம் கேட்கணும்னு நினைச்சேன். பூங்குழலியோட வீட்டை என்ன செய்யப் போறீங்க? அவங்க அதை காலி பண்ணனும் இல்ல?"

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Donde viven las historias. Descúbrelo ahora