19 பொல்லாத கூட்டம்

1.8K 79 9
                                    

19 பொல்லாத கூட்டம்

இதற்கிடையில்...

கோபத்தில் பொருட்களை எல்லாம் போட்டு உடைத்து கொண்டிருந்தாள் கீர்த்தி. அவளது பெற்றோர் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள்.

"மலரவன் எப்படி இந்த மாதிரி செய்யலாம்? என்னை விட்டுட்டு அவன் எப்படி பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்கலாம்? என்னைப் பத்தியும் என்னோட காதலைப் பத்தியும் அவனால எப்படி நினைக்காம இருக்க முடியுது?" ஒரு அழகிய பூ ஜாடியை  போட்டு உடைத்தாள் அவள். அந்த ஜாடி சுக்கு நூறாய் உடைந்து சிதறியது. அதிலிருந்து ஒரு துண்டு, அவள் காலை பதம் பார்த்தது. குமரேசன் ஓடிச்சென்று மேலும் அவள் காயப்படாமல் தடுக்க முயன்றார்.

"போதும் நிறுத்து கீர்த்தி. இப்படி எல்லாம் செய்யறதுனால எதுவும் மாறி போக போறதில்ல. மலரவன் நம்ம நினைச்ச மாதிரி இல்ல. அவனுக்குன்னு ஒரு பாலிசி, அவனுக்குன்னு ஒரு விருப்பம், அவனுக்குன்னு ஒரு லைஃப் ஸ்டைல்னு அவன் வாழ்ந்துகிட்டு இருக்கான். அதை யாராலும் மாத்த முடியாது. அந்த ரசனை கெட்டவனை மறந்துடு. அது தான் உனக்கு நல்லது. உன்னோட மதிப்பு தெரிஞ்ச ஒருத்தன் உனக்கு புருஷனா வருவான்..."

"முடிச்சிட்டீங்களா? பேச வேண்டியதை பேசி முடிச்சிட்டீங்களா? நீங்களா என்னை மலரவனை மறக்க சொல்றீங்க? என்னால எப்படி முடியும்? அவன் செஞ்சதை நான் மறந்துடுவேனா? அவனை மறக்க முடியுமா என்னால? நிச்சயம் முடியாது"

"ஆனா, உன் வாழ்க்கை..."

அவர் பேச்சின் ஊடே புகுந்து,

"வாழ்க்கையாம் வாழ்க்கை, மண்ணாங்கட்டி... எனக்கு பிடிச்சது எனக்கு கிடைக்கலன்னா, அப்புறம் அந்த வாழ்க்கையில ரசிச்சு வாழ என்ன இருக்கு? அவன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்... என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வேற ஒருத்தியை தேர்ந்தெடுத்துட்டான்..."

"கீர்த்தி, நான் சொல்றதை கேளு. உனக்கு எந்த மதிப்பும் கொடுக்காத ஒருத்தனுக்காக எதுக்காக நீ உன் வாழ்க்கையை வீணாக்கிக்கணும்? அவன் என்னமோ சந்தோஷமா தான் இருக்கான்...அப்புறம் நீ எதுக்காக இப்படி இருக்க?"

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Où les histoires vivent. Découvrez maintenant