16 பூங்குழலியின் ஆற்றல்
மலரவனைப் பற்றி எண்ணியபடியே இருந்தாள் பூங்குழலி. அவனது அணுகுமுறை, அவனது வார்த்தைகள், அவனது முயற்சி, இவற்றிற்கு பின்னால் ஏதோ ஒரு மறைமுகமான அர்த்தம் இருப்பதாக தோன்றியது அவளுக்கு.
அவன் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்ற மடிக்கணினியும், கோப்பும் அவளது கட்டிலில் மேல் இருந்தது. அவற்றைப் பார்த்தவுடன் தன் மனதில் எழுந்த எண்ணத்தை தட்டிவிட்டு, அவற்றின் மீது தன் கவனத்தை செலுத்தினாள். கிட்டத்தட்ட தொன்னூறு சதவீதத்திற்கான விஷயம் அவளுக்கு பிடிபட்டுவிட்டது. ஆனாலும் சில விஷயங்களில் அவளுக்கு சந்தேகம் இருந்தது. அவள் சுவர் கடிகாரத்தை பார்க்க, அது மணி 11:30 என்று காட்டியது.
இப்பொழுது மலரவன் உறங்கிக் கொண்டிருப்பான். ஆனால் லண்டனிலோ, இப்பொழுது மணி ஏழு தான். அதனால், ஸ்டீவுக்கு ஃபோன் செய்யும் முடிவுக்கு வந்தாள் அவள்.
தனது கைபேசியை எடுத்து ஸ்டீவுக்கு வீடியோ கால் மூலமாக அழைப்பு விடுத்தாள். அதை ஏற்றான் ஸ்டீவ்.
"ஹலோ மேடம், குட் ஈவினிங்"
"குட் ஈவினிங் ஸ்வீட். எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு. உங்க கிட்ட கேட்கலாமா?"
"அஃப்கோர்ஸ் மேம்... தாராளமா கேட்கலாம்"
பல்வேறு துறைகளில் தனக்கு எழுந்த பல்வேறு சந்தேகங்களை, அவனிடம் கேட்க துவங்கினாள் பூங்குழலி. அந்த நிறுவனத்தின் அமைப்பு, அவர்களுடைய ப்ரோக்ராம் ஸ்ட்ரக்சர், முந்தைய நிகழ்ச்சி, இப்படி பலதரப்பட்ட கேள்விகள்...
கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகவும் ஆர்வத்துடனும் பதில் அளித்தான் ஸ்டீவ். பூங்குழலியின் கிரகிக்கும் ஆற்றலை கண்டு அவன் வியந்து போனான். அவள் இவ்வளவு ஆழமாக அனைத்தையும் தெரிந்து கொள்ள நினைப்பாள் என்று அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை. நுனிப்புல் மேயும் பழக்கம் இல்லாத பூங்குழலி, ஆழமாய் இறங்கி தூர்வாரிக் கொண்டிருந்தாள். அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும், ஸ்டீவை வியப்பில் ஆழ்த்தியது. மலரவனின் தேர்வு என்றால் சும்மாவா? என்று எண்ணிக்கொண்டான் அவன்.
ESTÁS LEYENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...
