55 வியூகம்
காவல் நிலையத்தில், சோகமே வடிவாய் அமர்ந்திருந்தார் ரஞ்சித். இந்த சூழ்நிலையை தான் ஒரு நாள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர் அறிந்தே இருந்தார். சமீப காலத்தில், குமரேசனின் நடவடிக்கைகள் பெருமளவிற்கு மாறிப் போயிருந்தது. மற்றவர்களது வெறுப்பை சம்பாதிக்கும் விஷயங்களை அவர் செய்ய ஆரம்பித்திருந்தார். மணிமாறனையும் அவரது குடும்பத்தையும் அவர் குறி வைத்திருந்தார். அவர்களது பலம் அறிந்த பின், அதை செய்ய அவர் எப்படி துணிந்தார் என்று தான் அவருக்கு புரியவில்லை.
சட்டென்று காவல் நிலையம் சூடெறி போக, தன் பார்வையை நுழைவு வாயிலின் பக்கம் திருப்பினார் ரஞ்சித். அவர் எதிர்பாராத மூவர் காவல் நிலையத்தினுள் நுழைந்தார்கள். பட்டென்று தன் முகத்தை திருப்பிக் கொண்ட அவர், அவர்களை பார்க்க அவமானப்பட்டு கொண்டு, தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டார். அவர்கள் அங்கு வேறு விஷயமாக வந்திருக்கிறார்கள் என்று அவர் எண்ணினார்.
மகிழனின் நண்பனான ஆய்வாளர் அவனை பார்த்து புன்னகைத்தார்.
"என்ன விஷயம் சார்?" என்றார் அவர்.
"மிஸ்டர் ரஞ்சித்தை பெயில்ல எடுக்க நாங்க இங்க வந்திருக்கோம்" என்றார் பூபதி.
அதைக் கேட்ட ரஞ்சித் திடுக்கிட்டார். நம்ப முடியாத பார்வையுடன் எழுந்து நின்றார். தான் கொண்டு வந்த பிணை ஆணையை ஆய்வாளரிடம் வழங்கினார் பூபதி. அவர்களிடம் வந்த ரஞ்சித்,
"இவங்க என்னை யார்கிட்டயும் பேசவே விடல" என்றார்.
"அவர் குமரேசன் கிட்ட பேசணும்னு சொன்னாரு. இந்த கேஸ்ல மெயின் கல்ப்ரிட்டே அவர் தான். அவர் விஷயமா தான் நாங்கள் இவரை அரெஸ்ட் பண்ணி இருக்கோம். அதனால தான் நாங்க அவர்கிட்ட பேச இவரை விடல" என்றார் ஆய்வாளர்.
"எதுக்காக நீங்க என்னை அரெஸ்ட் பண்ணீங்க சார்?" என்றார் ரஞ்சித்.
"நாங்க ராகேஷை அரெஸ்ட் பண்ண நேரத்துல இருந்தே குமரேசன் மேல சந்தேகத்தில் தான் இருக்கோம். அவருக்கு டிரக்ஸ் டீலிங்கில் சம்பந்தம் இருக்குமோன்னு நாங்க சந்தேகப்படுறோம். அதனால தானே அவர் ராகேஷுக்கு வலிய போய் உதவி செஞ்சிருக்காரு? இல்லன்னா காரணமே இல்லாம அவனுக்கு எதுக்காக இவர் இருபத்தைந்து லட்சம் கொடுக்கணும்?" என்றார் ஆய்வாளர்.
ESTÁS LEYENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...