39 கீர்த்தியின் செயல்
அழைப்பு மணியின் ஓசை கேட்ட கீர்த்தி, வரவேற்பறையில் யாரும் இல்லாததால், கதவை திறந்தாள். அங்கு ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
"நீங்க யாரு?" என்று அவள் கேட்க,
"நான் எம்எம் ஆஃபீஸ்ல இருந்து வரேன். மலரவன் சார் கிட்ட கொடுக்க சொல்லி, மித்திரன் சார் இதை குடுத்து அனுப்பினார்" என்றான்.
"நான் அதை அவர்கிட்ட குடுத்துடுறேன்" என்று தன் கையை அவனிடம் நீட்டினாள் கீர்த்தி.
அதே நேரம் அங்கு வந்த மின்னல்கொடி,
"இது யார் கீர்த்தி?" என்றார்.
கீர்த்தியிடம் கூறிய அதே விவரத்தை அவரிடமும் கூறினான் அவன். அவனிடம் இருந்த உரையை பெற்றுக் கொண்ட மின்னல்கொடி,
"இது என்ன?" என்றார்.
"மிஸ்டர் அண்ட் மிஸஸ் மலரவனோட லண்டன் டிக்கெட், மேடம்" என்றான்.
"அப்படியா?" என்று மின்னல்கொடி மகிழ்ச்சியுடன் கேட்க, கீர்த்திக்கு வயிறு பற்றி எரிந்தது.
"லண்டனா?" என்றாள்.
"அவங்க ரெண்டு பேரும், அங்க நடக்க இருக்கிற ஒரு ஈவென்ட்க்காக லண்டன் போறாங்க" என்று கூறியபடி அங்கிருந்து மலரவனின் அறைக்கு சென்றார் மின்னல்கொடி.
அதை கேட்ட கீர்த்தி, வெறி பிடித்தவள் போல் ஆனாள். இங்கு, அவளது திருமண வாழ்க்கை, திருசங்கு சொர்க்கம் போல ஊசலாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பூங்குழலி தேனிலவுக்காக லண்டன் செல்கிறாளா? அப்படி என்றால் அவர்கள் தங்கள் திருமண வாழ்வை துவங்கி விட்டு இருக்க வேண்டும். அதனால் தான், லண்டனில் நடக்கும் ஈவன்டை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, அங்கு செல்ல துடிக்கிறார்கள். அப்படி என்றால், அவள் இங்கு எதற்காக இருக்கிறாள்? இங்கே நடக்கும் இந்த கருமத்தை எல்லாம் பார்ப்பதற்காகவா? நிச்சயம் இல்லை... மகிழன் அவளது கட்டுப்பாட்டிற்குள் வருவதாக தெரியவில்லை. மகிழன் மீது தன் கவனத்தை செலுத்துவதை விட, மலரவன் பூங்குழலியை சேரவிடாமல் தடுப்பதுதான் இப்போதைக்கு முக்கியம். அவர்கள் சந்தோஷமாய் இருக்கவே கூடாது... நரகத்தை அனுபவிக்க வேண்டும் என்று பல்லை கடித்தாள் கீர்த்தி.
ESTÁS LEYENDO
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
Romanceலண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்க...