💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓தேவன் ஈன்ற ஜீவனாக
உன்னை பார்க்கிறேன்
மீண்டும் உன்னை வேண்டுமென்று
தானம் கேட்கிறேன்
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓சூரிய பகவான் வானத்தில் வந்து ஒளியை வாரி வழங்கி கொண்டு இருந்தார். அந்த வெளிச்சம் வாசுகி முகத்திலும் பட எழுந்து கொண்டாள்.
வாசுகி கண்ணை திறந்து பார்க்க ஆர்ப்பரித்து வெள்ளம் ஓடும் ஒரு ஆற்றின் அருகே தான் இருப்பது அவளுக்கு புரிந்தது. அவளுக்கு பயங்கரமாக குளிர் எடுத்தது ஏதோ முன்பின் பார்க்காத ஒரு இடத்திற்கு வந்து விட்டாள் என்று அவளுக்கு புரிந்தது.மனமானது நடந்த நிகழ்ச்சியை தான் அசை போட்டு கொண்டு இருந்தது. நடந்தது எல்லாம் கனவாக இருக்க கூடாதா என்று தோன்றினாலும் அவள் இறுதியாக பார்த்த உருவம் அவள் மனதில் வந்து போனது.அப்படியே அமர்ந்து இருந்தவள் யோசிக்க ஆரம்பித்தாள்.வாசுகி (m. v):நான் கடைசியா பாத்தப்போ ஒரு உருவம் என்ன பிடிச்சிச்சு அது ரொம்ப பிரகாசமா என்ன மாதிரி சரி 1000 வருஷம் எனக்கு முன்னால அவங்க இருக்குறதால அவங்கள மாதிரி நான் இருக்கேன்னு வச்சிக்கலாம்.
அப்போ நேத்து என்ன காப்பாத்த வந்தது சித்ராங்கதா அப்டினா நான் இந்நேரம் சேது கூட இருக்கணும் அங்க இல்லாம நான் இங்க என்ன பண்ணிட்டு இருக்கேன். இந்த சித்ராங்கதா என்ன காப்பாத்த வந்தாங்களா இல்லை கோர்த்து விட வந்தாங்களா. ஆஹ் எதுவும் தெரியலையே.எப்படியும் இப்போவும் அவங்க இங்க தான் இருக்கணும்.வாசுகி :ஏங்க சித்ராங்கதா இங்க இருக்கீங்களா இருந்தா கொஞ்சம் என் முன்னாடி வாங்களேன்
என்று கத்தி கூப்பிட்டாள் வாசுகி ஆனால் பதில் வரவே இல்லை
வாசுகி :இங்க பாருங்க உங்களால தான் அரண்மனையில அடிமையா எல்லாம் இருந்துருக்க அதுக்காகவாது வாங்க
அப்போதும் யாரும் வரவில்லை
வாசுகி :அவ்ளோ ஆயிடுச்சா இங்க பாருங்க நீங்க ஒரு நாட்டுக்கு இளவரசியா இருந்துருக்கலாம் அதுக்காக இவ்ளோ பண்ணாதீங்க எனக்கு தெரிஞ்சு உங்களால எனக்கு ஒண்ணும் நல்லது நடக்குற மாதிரி தெரியல உங்களுக்கு தான் என்னால ஏதோ காரியம் ஆகணும் அப்படிங்கிற மாதிரி இருக்கு அதனாலதான் இப்போ கூட இங்க என்ன கூட்டிட்டு வந்துருக்கீங்க.உங்களுக்கு நான் வேணும் அப்டின்னு நினைச்சீங்கன்னா இப்போ என் முன்னாடி வாங்க இல்லைன்னா அந்த தண்ணில போய் நான் விழுந்து செத்துருவேன் அப்புறம் பிரச்சனை எனக்கு இல்லை உங்களுக்கு தான் பாத்துக்கோங்க
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...