சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -50(இறுதி அத்தியாயம் )

2.1K 93 229
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இன்று நேற்று
நாளை யாவும் கொண்டு
போகும் காதலே உன்னை
சேர வேண்டித்தானே மண்ணில்
எங்கும் வாழ்கிறேன்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

வாசுகி ஆதித்யாவை பார்க்க ஆதித்யா வாசுகியை பார்த்து கொண்டு இருந்தான் அவர்கள்தான் உறைந்து போனது போனது போல் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் உறைந்து நின்றால் கையில் உள்ள மெழுகு உருகாமல் இருக்குமா வாசுகி அவனை பார்த்துகொண்டிருக்க அவள் மெழுகை ஒழுங்காக பிடிக்காமல் இருந்ததால் உருகிய மெழுகு அவள் கைகளில் பட்டது. மெழுகு சட்டென்று கையில் பட்டதும் ஸ்ஸ் என்று சொன்னவள் இன்னொரு கையில் மெழுகை பிடித்து அதை அணைத்தாள். அப்போது ஆதித்யா அவளிடம் வந்து என்ன ஆச்சு வலிக்குதா என்று கையை பார்த்து ஆராய்ச்சி பார்வையுடன் கேட்டான் . வாசுகியே உண்மையில் அதை அவ்வளவு பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. மெழுகு சுட்டால் சில நொடிதானே வெப்பம் இருக்கும் அதற்கு பிறகு எதுவும் தெரியாது இல்லையா அதான் வாசுகி அமைதியாக இருந்தாள். ஆனால் ஆதித்யா அவள் ஸ்ஸ் என்று சொன்னதும் முன்னால் இருந்த அவள் அப்பாவை தள்ளிவிட்டு அவள் அருகில் வந்திருந்தான்.வாசுகி அவனை பார்த்து கொண்டிருக்க அவன் அவள் கைகளை பார்த்து கொண்டு இருந்தான்.

ஆதித்யா :ஏங்க என்னங்க நீங்க. கொஞ்சம் பாத்து நடந்துருக்கணும். வலிக்குதா

வாசுகி : இது மெழுகுதான் இவ்ளோ பதட்டம் ஆகுற அளவுக்கு ஒண்ணும் ஆகல நான் நல்லாத்தான் இருக்கேன்.

என்று சொன்னவள் அவள் அப்பாவை பார்க்க அவள் அப்பாவும் அம்மாவும் அவனைதான் பார்த்து கொண்டு இருந்தார்கள். அப்போதுதான் கொஞ்சம் உணர்ச்சி வசபட்டுவிட்டோமோ என்று யோசித்தான் ஆதி.

அப்பா : என்னம்மா பாத்து இருக்கணும்டா. எம் பொண்ணு குழந்தை மாதிரி மாப்பிள்ளை ஒண்ணுமே
தெரியாது. நீங்க வாங்க உக்காருங்க.நீ போய் மாப்பிள்ளைக்கு சாப்பிட எதாவது கொண்டு வாம்மா .

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now