சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -11

1K 64 33
                                    

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️வாட் படை கொண்டு தாக்கிய போதும்
வானம் வளைவதும் இல்லை
நாற் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும்
வேட்கை அழிவதும் இல்லை.
கண்டங்கள் பிண்டாலும் அண்டங்கள் விண்டாலும்
நெஞ்சங்கள் மாறாது வா வா
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

வழக்கம் போல தன்னுடைய திட்டம் தோல்வி அடைந்ததை எண்ணி இவர் மனதில் விம்மி கொண்டு இருக்க அவருடைய புதல்வன் வந்து சேர்ந்தான் அவன் பெயர்  ஆதித்யன் சக்கிரவர்த்தி பெயரில் தான் சக்கரவர்த்தி நிஜத்தில் சக்கரவர்த்தி இல்லை என்றாலும் அவனுடைய தாயை போல் ஆருத்ரன் மீது வெறுப்பு இல்லை அதே நேரம் ஆருத்ரனும் இவனும் அவ்வளவு நெருக்கமாக இருந்ததும் இல்லை. காரணம் ஆருத்ரன் எப்போதும்  அரசு மக்கள் என்றே இருந்ததால் இருவருக்கும் நெருக்கம் அவ்வளவாக இல்லை. அதனால் மீனாட்சி ஒரு மனக்கோட்டை கட்டி வைத்து இருந்தார் சரியான நேரத்தில் சக்கரவர்த்தியிடம் பேசி அவன் மனதை மாற்றி ஆருத்ரனிடம் இருந்து மன்னன் பதவியை பெற்று விட வேண்டும் என்று.அதற்கு ஏற்றது போல சக்கரவர்த்திக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது.ஆருத்ரன் கூட அந்த நடை கூட பயிலாத அந்த பச்சிளம் பிள்ளையின் மீது உயிரையே வைத்து உள்ளான். அவனுக்கும் கூட தன் கடமை முடிந்தால் உத்தமனை மன்னன் ஆக்கும் எண்ணம் தான் கொண்டு இருக்கிறான். இது மீனாட்சிக்கும் தெரியும் தான் ஆனால் என்ன செய்ய அவன் கடமை என்று நினைப்பது சித்திரதேசத்தை சிதைப்பதை தானே.

சக்கரவர்த்தி :தாயே என்ன சிந்தனை

மீனாட்சி :இல்லை உன் தமையனுக்காகதான்  இந்த பாலினை கொண்டு வந்தேன் ஆனால் அவனோ புலவர் ஒருவர் வந்துள்ளார் என்று சொன்னதும் சென்று  விட்டான்

சக்கரவர்த்தி :இவ்வளவு தானா அதற்கு தான் உங்கள் முகம் அவ்வளவு வாடி இருந்ததா.தமையன் நாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் நான் உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறேன் நீங்கள் அந்த பாலை எனக்கு தாருங்கள் நான் குடிக்கிறேன்

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Opowieści tętniące życiem. Odkryj je teraz