சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் 26

1.1K 62 24
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில்
கேட்கும் சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா
பார்த்து போன
பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா
தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே தீயில்
சேர்ந்து போகும் திருட்டு
போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் ஒரு
தருணம் எதிரினில்
தோன்றுவாய் என்றே
வாழ்கிறேன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

மீண்டும் அறைக்கு வரும்வரை வாசுகியும் ஆருத்ரனும் எதுவும் பேசவில்லை இருவரும் அமைதியாக தான் இருந்தார்கள். அந்த அறை முழுவதும் அமைதி மட்டும் தான் நிறைந்து இருந்தது.வாசுகியின் மனமானது மிகவும் வேதனையில் இருந்தது.அவள் மனதின் வேதனை எதிரொலித்தால் அந்த அறை முழுவதும் அழுகுரல் தான் எதிரொலிக்கும். வாசுகியின் கைகள் இன்னும் ஆருத்ரன் விடவில்லை வாசுகி ஆருத்ரனை பார்த்தாள். ஆனால் ஆருத்ரனும் ஏதோ யோசனையில் இருந்தான் எனவே அவனை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாமல் அவன் கைகளில் இருந்து தன்னுடைய கைகளை விடுவித்து கொண்டு சென்று விடலாம் என்று
நினைத்த வாசுகி அவன் கைகளில் இருந்து தன்னுடைய கைகளை விடுவித்து கொள்ள முற்பட ஆருத்ரன் கைகள் அவளை அழுத்தமாக பிடித்து கொண்டன அவளுக்கு அவன் பிடித்தது வலிக்கவில்லை அதற்காக அவன் பிடியில் இருந்து அவளால் விலகவும் முடியவில்லை.

வாசுகி :அரசே என்ன செய்கிறீர்கள் நீங்கள் என்னை விடுங்கள் நான் செல்ல வேண்டும்

ஆருத்ரன் :நீ செல்ல கூடாது என்று தான் நான் கரங்களை பிடித்து உள்ளேன் வாசுகி. நீ அருகில் இருக்கும் போதே கூறாத பதிலை தொலைவில் சென்ற பிறகு எப்படி கூறுவாய்.

வாசுகி :எனக்கு உங்களுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை அரசே என்னை விட்டு விடுங்கள்.

ஆருத்ரன் :நான் மன்னன் கேள்வி கேட்கிறேன் வாசுகி எனக்கு தேவை பதில் தான் பதில் கூறு

வாசுகி :உங்களுக்கு பதில் அளிக்க எந்த அவசியமும் எனக்கு இல்லை. நீங்கள் மன்னன் என்றால் என்னை அரசவையில் கேள்வி கேட்க வேண்டும் உங்கள் அறையில் வைத்து அல்ல அரசே

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Donde viven las historias. Descúbrelo ahora