❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️காலமே காலமே
என்னை எங்கு கொண்டு போகிறாய்
மன்னவன் சாகிறான்
கைகள் கட்டி பார்க்கிறாய்
வாழ்க்கையின் காரணம்
என்னை விட்டு போகுதோ
வீதியில் வீரவாள்
தீ பிடித்து வேகுதோ
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வாசுகி ஆருத்ரனை தான் பார்த்து கொண்டு இருந்தாள் அவன் வாசுகியை பார்த்து புன்னகை செய்தான்.
வாசுகி : ஆதி என்ன தெரியும் உங்களுக்கு எனக்கு சொல்லுங்க
அருத்ரன் : உன் கதை தெரியும்.
Me :
வாங்க மக்களே அவருக்கு தெரிஞ்ச கதை என்னன்னு நம்மளும் பாப்போம்.
------
சேதுபதி இறந்த அன்று உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆருத்ரன் அவ்வளவு வேதனை அடைந்தான்.வாசுகிக்கும் சேதுக்கும் உள்ள நட்பை பார்த்து சேது மீது அவனுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது.அவனுக்கு ஏதோ அவன் தோழன் இறந்தது போல் இருந்தது அதுவும் அவன் எப்படி இறந்தான் என்று கேட்ட போது கோபத்தின் எல்லையை கடந்து விட்டான். செழியன் மீது ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் இப்போது கொல்ல வேண்டும் என்ற வெறியில் இருந்தான்.
சேதுவை பற்றி நினைத்து கொண்டே ஆருத்ரன் அவன் வாளில் இருந்த ரத்த கறையை அவனே சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
ருத்ரா உன் மீது படிந்த ரத்தம் எல்லாம் உன் ரத்த வேட்கையை தீர்த்ததா என்று எனக்கு தெரியாது ஆனால் உன்னுடைய ரத்த வேட்கையை ஒரு உயிரை எடுப்பதன் மூலம் நிச்சயம் தீர்த்து வைப்பேன். வீரன் ஒருவனை சூழ்ச்சி செய்து வீழ்த்தனால் இன்னொரு வீரன் வந்து அந்த சூழ்ச்சிகாரர்களை வீழ்த்துவான் என்று அந்த முட்டாள்களுக்கு நான் நிச்சயம் உணர்ந்துத்துவேன்.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...