சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -36

1K 65 71
                                    

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

அரண்மனைக்கு வந்த சக்கரவர்த்தி யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக பயிற்சி செய்யும் இடத்துக்கு சென்று விட்டான். அவனோடு பயிற்சி செய்ய 10 வீரர்கள் சென்றார்கள். எல்லோருக்கும் உள்ளுக்குள் உதறியது. ஏன் என்றால் சக்கரவர்த்தி வாசுகியை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று மிகவும் வருத்தத்தில் இருந்தான். ஆருத்ரன் கேட்டால் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று எப்படி சொல்வது என்று நினைத்தவன் வருத்தம் எல்லாம் கோபமாக மாறியது கோபத்தை பிறரிடம் காட்டுவது அவனுக்கு பிடிக்காததால் வாளுடன் தன் கோபத்தை காட்டுவது என்று முடிவு செய்து விட்டான். வீரர்களுக்கு எதுவும் அடிபடும் படி அவன் நடந்து கொள்ள மாட்டான். ஆனால் நிச்சயம் பயிற்சி முடிய சில மணிநேரங்கள் ஆகும். மீனாட்சி சக்கரவர்த்தி வருகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தார். அவருக்கும் வாசுகி கிடைக்கவில்லை என்னும் தகவல் தெரிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் சக்கரவர்த்தி அதனால் கோபம் கொண்டு வாள் பயிற்சி செய்ய சென்றிருப்பதையும் அறிந்து கொண்டான்.எல்லாம் தான் நினைத்தபடி நடந்து கொண்டு இருப்பதால் சக்கரவர்த்தியின் கோபம் குறைந்த பிறகு பேசலாம் என்று நினைத்து கொண்டார்.

-----

இங்கே வாசுகி ஆருத்ரனும் நின்று கொண்டு இருந்தார்கள். வாசுகிக்கு என்ன என்றே தெரியவில்லை அவன் அணைப்பில் இருந்த போதும் திடீரென ஏதோ அவனை விட்டு பிரிந்து விடுவோமோ என்று ஒரு எண்ணம் சட்டென்று தோன்றியது. அவள் கண்களில் கண்ணீர் வந்தது அவள் கண்ணீரை உணர்ந்தவன் உடனே அவளை விலக்கி அவள் முகத்தை கைகளில் ஏந்தினான்.

ஆருத்ரன் :என்ன நேர்ந்தது வாசுகி. உங்களின் விழிகளில் இருந்து ஏன் நீர் வழிகிறது

வாசுகி அவன் கைகளை பிடித்தவள் ஒன்றுமில்லை என்பது போல் தலை அசைத்தாள்.ஆனால் அவள் கண்கள் கண்ணீரை நிறுத்தவில்லை

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now