சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -23

1K 53 24
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்து ரத்தம் கசிகின்றதே
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

வாசுகி அவரை பார்த்து கொண்டு
இருந்தாள். அவருடைய கண்கள்  அது
அவளை தான் பார்த்து கொண்டு இருந்தது. திடீர் என்று அந்த இடம் மிகவும் குளிர ஆரம்பித்தது.அவளும் அதை உணர ஆரம்பித்தாள்

காளகண்டன் :என்ன வாசுகி உன்னுடைய கண்கள்  ஏன் அச்சத்தை வெளி படுத்துகின்றன

வாசுகி :என்னோட பேர் உங்களுக்கு எப்படி தெரியும்

காளகண்டன் :அறிவேன் வாசுகி இங்கு நடக்கும் அனைத்தும் அறிவேன். நீ ஒவ்வொரு முறை ரகசிய அறை வழி என்னை பார்த்ததையும். உள்ளே வந்ததையும் உண்மையை அறிய நீ போராடுவதையும் நான் அறிவேன்.

வாசுகி :நான் வந்தது உங்களுக்கு தெரியும்.நான் வந்த காரணமும் தெரியும் என்று கூறுகிறீர்கள்.ஆனால் இதுவரை ஒருமுறை கூட நீங்கள் அந்த கட்டிலை விட்டு நகர்ந்து நான் பார்த்தது இல்லையே.ஆனால் இன்று என் முன்னால் எப்படி நிற்கிறீர்கள்.

காளகண்டன் :இங்கு யாரும் மெய் எது என  தேடவில்லை.பொய்யை நம்பி வாழ ஆரம்பித்து விட்டார்கள் . நீ தான் மெய் எது என்று தேடி வந்து இருக்கிறாய் அதனால் தான்  இந்த காளகண்டன் ஆருத்ர ஆதித்ய சந்திர சேகரனின் சிற்றப்பன் உன் முன்பு நிற்கிறான்.

வாசுகி :உங்கள் மனைவி மீனாட்சி அல்லவா

காளகண்டன் :அவள் என் மனைவி என்னும் பெயரில் வந்த சாபம். அவளால் தான் என் ஆருத்ரன் இப்படி துன்ப படுகிறான். என் தமையன் அண்ணியார் இல்லாமல்  போனதற்கு காரணமே அவள் தான்.

வாசுகி :என்ன கூறுகிறீர்கள் தெளிவாக கூறுங்கள்

காளகண்டன் :திருமணம் ஆன சிறிது நாட்களில் விருந்து என்னும் பெயரில் உணவில் மெதுவாக கொல்லும் விஷம் கலந்து என்னுடைய தமையன் மற்றும் அண்ணியாருக்கு கொடுத்து விட்டனர் .அன்று ஆருத்ரன் விருந்தில் என்னுடன் அமர்ந்து ஏனோ என்னுடன் தான் உண்பேன் என்று அடம் பிடிக்க அவனுக்கு நான் என் கைகளால் உணவு அளித்தேன். சித்திரதேசத்தை விட்டு எங்கள் நாட்டு எல்லையை அடைந்த சில நாட்களில்    அண்ணனும் அண்ணியும் இறந்து விட்டார்கள். எங்கள் அண்ணன் யாருக்கும் தீங்கு செய்தது இல்லை ஒரு கை கொண்டு கேட்பவர்களுக்கு இரு கைகளாலும் வாரி கொடுப்பவர். அவருக்கு சிறிதும் சளைத்தவர் அல்ல அண்ணியார். அவர்களுக்கு இப்படி ஒரு மரணமா என்னும் சோக கடலில் மூழ்கியது. அதோடு நான் விசாரித்த போது தான் தெரிந்தது சித்திரசேனனின் சதி  போர் தொடுத்து செல்ல ஆயத்தம் ஆன போது மீனாட்சி வாக்கு ஒன்றை ஆருத்ரனிடம் பெற்று விட்டாள் அவள் உயிருடன் இருக்கும்  வரை சித்திரதேசத்தின் மீது படை எடுக்க கூடாது என்று. அவனும் வாக்கினை வழங்கி விட்டான். சிறுவன் என்றாலும் மன்னன் அவன் என்பதால் எங்களால்  மறுத்து பேச இயலவில்லை.அவனுடைய அந்த சிறு வயதில் பெற்றோரை இழந்து அவன் பட்ட வேதனை சொல்லி தீராது. சில காலம் கழித்து ஒரு நாள் இரவு வேளை மீனாட்சி எங்கோ செல்வதை நான் பார்த்தேன் நானும் அவளை அறியாது பின் தொடர்ந்து சென்றேன். அப்போது தான் அவள் ஒரு இடத்தில் சித்திரசேனனை சந்தித்து பேசியதை நான் கேட்டேன். எங்கள் அனைவர் முன்னிலையில் அப்பாவியாக நடித்த அவளின் சுய உருவம் அன்று தான் தெரிந்து கொண்டேன்.ஆனால் அவள் என்னை அங்கு வரவைக்கும் நோக்கத்தில் தான் சென்று இருக்கிறாள் என்பது என் முதுகில் பாய்ந்த  அம்பிற்கு பின்னால் தான் புரிந்தது. அவளுக்கு தெரியும் நான் இருக்கும் வரை ஆருத்ரனை ஒன்றும் செய்ய இயலாது என்று. அதனால் தான் என்னை அசைய முடியாமல் வாதம் வர வைத்து பேச்சு வராமல் படுத்த படுக்கை ஆக்கி விட்டார்கள். சொந்த கணவனை கூட அவள் பதவிக்காக இந்த நிலைமைக்கு ஆளாக்கிய போது ஆருத்ரன் நிலை என்ன ஆகும் என்று நினைத்து பார்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Où les histoires vivent. Découvrez maintenant