❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️அமைதியுடன்
அவள் வந்தாள் விரல்களை
நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே
வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே
தலைகோத மரத்தடியில்
இளைப்பாறி கண் திறந்தேன
அவளும் இல்லை கசந்தது
நிமிடம்❣
️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
சேது சென்று விட்டான். வாசுகியும் குடும்பத்தினருடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று விட்டு உமையாள் உடன் வயலுக்கு சென்றாள்.அவளுடன் தோழிகள் சிலரும் இருந்தார்கள். அவர்கள் வேலை அங்கிருக்கும் பயிர்களை பறவைகள் உண்ணாமல் விலங்குகள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். எனவே தோழிகள் அனைவரும் அமர்ந்து பேசி கொண்டும் விளையாடியபடி இருந்தனர்.அதாவது கழங்கு விளையாட்டுதான் விளையாடி கொண்டு இருந்தார்கள் (me:கழிச்சிக்கொட்டைகளைக் கழங்கு என்றனர். நாளடைவில் கழிச்சிக்கொட்டை அளவிலான மணியாங்கற்களையும் கழங்கு விளையாடப் பயன்படுத்தினர். இக்காலத்தில் இந்த விளையாட்டு பாண்டிக்கல், ஒண்ணாங்கல் இரண்டாங்கல் என்னும் பெயர்களுடன் விளையாடப்பட்டு வருகிறது.நன்றி கூகிள்🏃♀️.)
இவர்கள் இவ்வாறு விளையாடி கொண்டும் பேசி கொண்டும் இருக்க அப்போது அவ்வழியாக கலப்பை எடுத்து கொண்டு உமையாளின் மனம் கவர்ந்தவர் செல்ல (me:இவருக்கு பேர் வச்சிட்டேனா இல்லையான்னு சொல்லுங்கப்பா.அதை மறந்துட்டேன். இனி கேரக்டர் யாரு யாருன்னு தனியா போடணும் எல்லாம் குழப்புது ).அவளை பார்த்ததும் உமையாள் வெட்கம் கொள்ள உடன் இருந்த தோழிகள் அவளை பாடல் பாடி கேலி செய்தார்கள். அவர்கள் பாடிய பாடலின் அர்த்தம் வாசுகிக்கு புரியவில்லை ஆனால் வாசுகிக்கு உமையாளை கேலி செய்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. அங்கிருந்து திருமணம் பற்றி பேச ஆரம்பித்து ஒவ்வொருவரும் திருமணம் பற்றி சொல்லி முடிக்க இப்போது சொல்ல வேண்டியது வாசுகியின் முறை ஆனது. வாசுகி என்ன சொல்லவென்று முழித்து கொண்டு இருந்தாள்.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...