❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கையில் மிதக்கும்
கனவா நீ
கை கால் முளைத்த
காற்றா நீ
கையில் ஏந்தியும்
கனக்கவில்லையே நுரையால்
செய்த சிலையா நீ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மீனாட்சி :யார் அங்கே விரைவாக வாருங்கள்.
வாசுகி வாளை கீழே இறக்கி அமைதியானாள். பணி பெண்கள் எல்லோரும் உள்ளே வந்து விட்டார்கள். வாசுகி எல்லோரையும் பார்த்தாள்.
வாசுகி :என்ன நேர்ந்தது. கூறுங்கள் இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும். வாளை எப்படி வீச வேண்டும் (me:அடேங்கப்பா )
என்று உண்மையான வாசுகி பொறுமையாக கேட்டாள்.
மீனாட்சி :இப்பொழுதே இங்கிருந்து சென்று விடு அந்தி சாயும் வரை என் முன் தோன்ற கூடாது.
வாசுகி : அது
மீனாட்சி :செல் இங்கிருந்து இப்பொழுதே
மீனாட்சி குரலை உயர்த்தி கத்த வாசுகி அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள். பதட்டத்தில் கையில் வாளை கூட போடாமல் அதை எடுத்து சென்று விட்டாள்.மீனாட்சிக்கு இன்னும் பதட்டம் குறையவே இல்லை.
மீனாட்சி :இந்த இடத்தை மீண்டும் தூய்மை படுத்துங்கள் நான் என்னுடைய அறைக்கு செல்கிறேன் என்னை யாரும் தொந்தரவு செய்ய கூடாது. முக்கியமாக வாசுகி வர கூடாது.
என்று சொன்னவர் தன்னுடைய அறைக்கு சென்றார். வாசுகி வாளை எங்க போட என்று கூட தெரியாமல் அதையும் தூக்கி கொண்டு நடந்து கொண்டு இருந்தாள்.அப்போது சக்கரவர்த்தி அந்த பக்கமாக வர அவனிடம் சென்றாள்.அவனும் வாசுகியையும் அவள் வைத்திருந்த வாளையும் மாறி மாறி பார்த்தான்.
சக்கரவர்த்தி :கையில் எதற்கு வாள்
வாசுகி :உங்கள் தாயார் தான் எனக்கு வாள் பயிற்சி அளித்தார் பிறகு திடீரென என்னை செல்ல சொல்லி விட்டார்கள்.நான் இதை அங்கே வைக்க மறந்து விட்டேன்
சக்கரவர்த்தி :அது சரி.இப்போது என்ன என்னிடம் பேச வேண்டும். எதற்காக என்னிடம் வந்தீர்கள்
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...