சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -22

1K 51 18
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே

உறங்கும் போதும்
இவனின் கவனம் உறங்கி போகாது
கனவில்கூட காவல் செய்யும்
கடமை மறவாது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

சக்கரவர்த்தியும் ஆருத்ரன் கூறிய இடத்திற்கு வந்து விட்டான் அங்கு மக்கள் நடமாட்டம் என்பது இல்லை. அவனுடன் 20 படை வீரர்கள் இருந்தார்கள்.

படைவீரன் :இளவரசே இங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறி இல்லையே நாம் தவறான இடத்திற்கு வந்து விட்டோமே

சக்கரவர்த்தி :இல்லை கேட்ட செய்தியின் படி வந்த இடம் சரிதான். இந்த இடத்தில் இருக்கின்ற அமைதி என்னுடைய மனதிற்கு சரி என்று படவில்லை. எல்லோரும் தயாராக இருங்கள்.

வீரன் ஒருவனை அழைத்தவன் அருகில் இருக்கும் ஊரில் உள்ள காவலர்களை அழைத்து வர சொன்னான்.

அவன் எதிர்பார்த்தது போலவே பல திசையில் இருந்தே அம்புகள் வர ஆரம்பிக்க முதலில் சமாளிக்க தடுமாறினாலும் பிறகு சக்கரவர்த்தியும் படை வீரர்களும்  தங்களை சுதாரித்து கொண்டனர்.இப்போது மறைந்து இருந்த சித்திரசேனன் வீரர்கள் இப்போது முன்னே வந்தனர்.அவர்கள் 100பேராவது இருப்பார்கள்.வீரன் எதிர்வரும் சவாலை கண்டு அஞ்சி நடுங்குவதில்லை மாறாக  அந்த சவாலை எதிர்கொள்ள நினைப்பார்கள் சக்கரவர்த்தியும் அதை தான் செய்தான்.20வீரர்கள் அங்கே 100 வீரர்கள். இரண்டு நாட்டு வீரர்களும் தாக்க ஆரம்பித்தார்கள்.
இங்கே ஆருத்ரனுக்கு மனமெல்லாம் ஏதோ ஒரு குழப்பம் . எனவே அவனும் சக்கரவர்த்தி சென்ற இடத்திற்கே குதிரையை செலுத்தினான். சக்கரவர்த்தியுடன் அதிகம் பேசவில்லை என்றாலும் அவன் மீது அதிக பாசம் கொண்டுள்ளான் அல்லவா அதனால் தான் இப்படி வேகமாக செல்கிறான்.

இங்கே வாசுகியும் தமயந்தியும் குழந்தையை சமாதானம் செய்து குழந்தை உறங்க வைத்து விட்டார்கள்.

வாசுகி :உங்கள் திருமணம் எப்படி நடந்தது.

தமயந்தி :உண்மையை கூற வேண்டும் என்றால் எங்கள் திருமணம் காதல் திருமணம்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now