சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -6

1.1K 64 26
                                    

🔥🔥🔥ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான். ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும்
சுற்றம் தான்🔥🔥🔥

ஒவ்வொருவரின் மனநிலையின் எதிரொலியாக இடியுடன் மழை வெளுத்து வாங்கி கொண்டிருந்தது. அவர்கள் இருந்த அந்த சிறிய குடிலில் ஒரு புறம் இவர்கள் அமர்ந்து இருந்தனர். ஏனெனில் அந்த ஏழையின் குடிசைக்கு மழையை மொத்தமாய் தவிர்க்க வலிமை இல்லை. வருண பகவான் வள்ளல் மனதுடன் அளித்த மழைநீர் கொஞ்சம் குடிசைக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒழுகி கொண்டிருக்க இருந்த செப்பு பாத்திரங்கள் அந்த நீரை சேகரித்து நிரம்பி கொண்டிருந்தன. நம்பியின் பெற்றோருக்கு தர்மசங்கடம் ஆகி விட்டது. விருந்தினர்கள் இருக்கும்போது இப்படி ஆகிறதே என்று. நல்லவேளை இருவருக்கும் உணவு அளித்து விட்டார்கள். இல்லை என்றால் இந்த நேரத்தில் அதற்கும் சிரமம பட வேண்டியது இருக்கும். அவர்கள் எண்ணம் எல்லாம் வந்த விருந்தினர்களுக்கு தொந்தரவு அசவுகரியம் வந்து விட கூடாது என்பதே ஆகும். இதை எல்லாம் ஆருத்ரன் கவனத்துக்கொண்டு தான் இருந்தான். ஏன் வாசுகியும் கூட இதை எல்லாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறாள்.

அவளுக்கு மிகவும் வித்யாசமாக இருந்தது யாரென்று தெரியவில்லை என்றாலும் இயன்றதை கொண்டு உபசரிக்கின்றார்கள் இது அவள் பார்த்ததற்கு மிகவும் வித்யாசம் ஆனது. வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் வேலைதான் அதிகம் என்று நினைக்கும் காலத்தில் வளர்ந்தவளுக்கு யாரென்று கூட அறியாத இவளுக்கு அவர்கள் அளிக்கும் கவனிப்பு நிச்சயம் வியப்பினை அளித்தது . (Me:நம்ம காலத்துல தெரியாதவங்கள கேட்க்கு வெளிய வச்சு பேசி அனுப்புறதுதான் பெஸ்ட் 😁😁😁.ஏன்னா அது அந்த காலம் இது இந்த காலம் )

இதற்கிடையில் அடிக்கடி இடி வேறு அந்த சத்தம் இவளின் இதய துடிப்பை அதிகமாக்கி கொண்டிருந்தது. நம்பி நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தான். இவளுக்கு உறக்கம் ஒரு பக்கம் கண்ணை கட்டியது இருந்தாலும் என்ன செய்வது உறங்க மனம் வரவில்லை அவளுக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை எனவே செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தாள். நாளை விடிந்தால் மாற்றுவதற்கு உடை கூட இல்லை இப்படி பல எண்ணம் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now