சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -15

1.1K 55 12
                                    


❣️❣️❣️இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை
விலக விருப்பம் இல்லையே பூவே
❣️❣️❣️

சேது  தாரகை என்றதும் அதிர்ச்சி ஆனாள் வாசுகி

வாசுகி :தாரகையா

சேதுபதி :ஏன் கேட்டீர்கள்

வாசுகி :ஒன்றுமில்லை அறிந்து கொள்வதர்காக கேட்டேன்.

சேதுபதி சரி என்பது போல் தலை ஆட்டினான்.

வாசுகிக்கு அன்றைய தினம் மிகவும் குழப்பமாக சென்றது. கண்டது கனவா நிஜமா பார்த்தது அவள் தானா. என்று பல குழப்பம்.அவளே குழப்பத்தில் இருந்ததால் .அவள் யாரை பற்றியும் யோசிக்கும் நிலையில் இல்லை. வயலுக்கு சென்றாலும் கோவிலுக்கு சென்றாலும் அவள் நினைவெல்லாம் தாரகை மீது தான் இருந்தது.  இரவும் வந்தது வாசுகி உறங்கவே வேண்டாம் என்று முடிவு செய்து உறங்காமல் இருந்தாள்.

மீண்டும் அதே உறைய வைக்கும் குளிர் அந்த அறை முழுவதும் பரவ ஆரம்பித்தது. வாசுகிக்கு குளிரில் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஒரு குரல் மிகவும் சன்னமான குரலில் வாசுகியின் பெயரை கூறி அழைப்பு விடுத்தது.

குரல் :மனதில் பல கேள்விகள் கொண்டுள்ளாய் உனக்கான பதில் நான் தருகிறேன். வெளியே வா. ஒரே இடத்தில் அடை பட்டு கொண்டால் உன்னால் உனக்கான இடத்திற்கு  செல்ல இயலாமல் ஆகி விடும். எடுத்து வை ஒவ்வொரு அடியாக என்னை நோக்கி முன்னேறி வா வாசுகி. அச்சம் கொண்டு இருந்தால் இங்கேயே இறந்து விடுவாய்.உனக்கு இங்கே வாழ்க்கை இல்லை உன்னாலும் இங்கு யாருக்கும் வாழ்க்கை இல்லை. பதில் அறிந்து கொள்ள வா வெளியே.

அந்த குரல் இப்போது அவள் காதின் அருகே நின்று பேசுவது போல இருந்தது. அவளால் அதை உணர முடிந்தது திரும்பி பார்த்தாள். ஆனால் யாருமில்லை. அந்த குரல் மிகவும் மெதுவாக ஒலித்தது. ஆனாலும் வாசுகியை வரவளைக்க போதுமானதாக இருந்தது. வாசுகி திண்ணை அருகே வரை வந்தாள்.அதற்கு மேல் குரல் கேட்கவில்லை.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now