சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -49

1.2K 62 140
                                    

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤❤❤️❤

விழிதாண்டி போனாலும்

வருவேன் உன்னிடம்

எங்கே நீ தொலைந்தாலும்

நெஞ்சில் உன் முகம்

காற்றென மாறுவேனோ ஓ...ஓ ...

உன் சுவாசத்தில் சேர்வேனோ

நீ சுவாசிக்கும்போதும்

வெளிவரமாட்டேன்

உனக்குள் வசிப்பேனே...

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

வாசுகி நிகழ்காலத்திற்கு வந்து விட்டாள் என்பதை அவளால் நம்பவே முடியவவில்லை. உண்மையில் அவளுக்கு அந்த நொடி ஆருத்ரன் உடன் மரணம் அடைந்திருந்தால் என்ன என்று தான் தோன்றியது. அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. உண்மையை சொல்ல போனால் அவ்வளவு அழுது அவளுக்கு இப்போது அழ கூட சக்தி இல்லாமல் போனது.

வாசுகி :ஆதி எங்க இருக்கீங்க என்ன விட்டுட்டு ஏன் போனீங்க. இப்டி பிரிவுலதான் முடியும் அப்படின்னா நமக்குள்ள ஏன் காதல் வந்துச்சு. ஐயோ எல்லாரும் என்ன விட்டு போயிட்டீங்க.என் வேதனை என்னன்னு புரிஞ்சிக்க கூட இங்க யாருமில்லை. நான் யார் கிட்ட என்னனு சொல்வேன். என்ன பண்ணுவ.

என்று முடியை பிடித்து இழுத்து கொண்டாள்.அவளுக்கு கண்ணை மூடினாலே ஆருத்ரன் உடன் விழுந்த அந்த நொடிதான் நியாபகம் வந்தது. அவளுக்கு சில நொடிக்கு முன்பு நடந்தது போல் இருத்தது.ஆனால் உண்மையில் ஆயிரம் வருடம் இடைவெளி இருந்தது. அவளால் இழப்பின் வேதனையை தாங்கி கொள்ள முடியவில்லை. அப்போது அவளின் தலையை யாரோ வருடுவது போல் இருந்தது நிமிர்ந்து பார்த்தாள் அவள் எதிரில் அந்த ஓவியம் இருந்தது. வாசுகி ஒன்றும் செய்யவில்லை அப்படியே அமர்ந்து இருந்தாள். இப்போது அவள் கண்ணில் கண்ணீரும் இல்லை ஒன்றும் இல்லை வெறுமை மட்டும் தான் இருந்தது. மீண்டும் அவள் தலையை யாரோ வருடுவது போல் இருந்தது. வாசுகி தலையை குனிந்து கொண்டாள்.நிமிர்ந்து பார்க்கவில்லை. அவள் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now