சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -8

1.1K 59 40
                                    

💓💓💓வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே💓💓💓

கூத்து பார்த்துவிட்டு எல்லோருடனும் பேசிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். உமையாளிடம் தனிமையில் இதை பற்றி பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.எல்லோரும் உறங்க சென்று விட்டார்கள். வாசுகியும் உறங்க சென்றாள் ஆனால் அவளால் உறங்க முடியவில்லை.

வாசுகி (m.v):வாசு தயவு செஞ்சி தூங்கு. இங்க வேற சீக்கிரமா எழுப்பி விட்ருவாங்க . ஐயோ என்ன பண்ணாலும் தூக்கம் வர மாட்டேங்குதே நான் என்ன பண்ணுவ.. இந்த பொண்ணு வேற தூங்கிட்டா.சரி கொஞ்சம் வெளிய போய்ட்டு வருவோம் ஆனா என்ன ஆனாலும் வாசல் தாண்டி போக கூடாது. சரி இன்னும் ஏன் படுத்துட்டு இருக்க எழுந்துரு.

என்று தனக்குள்ளேயே சொன்னவள்  எழுந்து வெளியே வந்தாள்.. நடுக்கூடத்தில் சேதுபதி அமர்ந்து இருந்தான் அவனை பார்த்தவள் அவனிடம் சென்றாள்.மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருந்தாலும் அவன் அருகில் வாசுகி வந்ததும் தன் எண்ண ஓட்டத்தில் இருந்து வெளியே வந்தவன்
அவளை என்ன என்பது போல கண்களாலேயே கேட்டான் .

வாசுகி :இன்னும் உறங்கவில்லையா நீங்கள்.

சேதுபதி :இல்லை உறக்கம் வரவில்லை

வாசுகி :எனக்கும் உறக்கம் வரவில்லை.

சேதுபதி :அதற்கு

வாசுகி :நாம் உரையாடலாம். உரையாடினால் உறக்கம் தானாக வந்து விடும்

சேதுபதி :எதைபற்றி நாம் உரையாடுவது.

வாசுகி :நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன் நீங்கள் பதில் சொல்லுங்கள். பிறகு நாம் அதை பற்றி உரையாடலாம் 

அவளை பார்த்து புன்னகை செய்தான்

சேதுபதி :கேள்விகள் தான் கேட்க வேண்டும் என்றால் கேட்டு கொள்ளுங்கள். நான் ஒன்றும் செய்ய போவதில்லை

வாசுகி (m.v):கண்டு பிடிச்சிட்டாரா சரி சரி சமாளிப்போம்.

வாசுகி :அது அப்படி இல்லை. இருந்தாலும் நான் கேள்வி கேட்க வேண்டும் .

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now