சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -33

1K 56 43
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பார்வை ஒன்றில்
காதல் கொண்டா எந்தன்
நெஞ்செங்கும் நுண்பூகம்பம்d
பேரே இல்லா பூவைக் கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

வாசுகி நெருங்கி வருபவனை அடிக்க முயற்சி செய்ய அவன் லாவகமாக வாசுகியின் கைகளை பிடித்து விட்டான். வாசுகியின் கைகள் வலிக்கும்படி அவன் கைகளை பிடிக்கவில்லை ஆனால் வாசுகியால் அவன் பிடியில் இருந்து அவளுடைய கையை விலக்க முடியவில்லை.

வாசுகிக்கு யாரையும் அழைக்ககூட மனம் இல்லை அவள் அவனை வெறுமனே பார்த்து கொண்டு இருந்தாள் பிறகு தட்டு தடுமாறி பேச ஆரம்பித்தாள்.

வாசுகி :யா யாரு நீங்க இங்க என்ன கொல்லதான் வந்துருங்கிளா

கருணாகரன் :உன்னை நான் கொல்வதா. அது என் கனவிலும் நடைபெறாத ஒரு காரியம் சித்ராங்கதா

வாசுகி (m. v):என்னது சித்ராங்கதாவா ஆஹா இவர் யாருன்னே தெரியலையே. ஆனா பாக்க நல்லவராதான் தெரியுறாரு ஆனா இங்க நான் நம்ப என்ன தவிர யாரும்இல்லையே நான் என்ன பண்ண

வாசுகி தனக்கு எதிரே இருப்பவனை நன்றாக பார்த்தாள். குப்பையில் கிடக்கும் வைரக்கல் போல இந்த கெட்டவர்கள் பார்த்ததும் நல்லவன் என்று சொல்லும் அளவுக்கு ஒரு தோற்றம் அவனிடம் இருந்தது. அவனுடைய முகத்தை பார்த்து கொண்டு இருந்தவள் அவளுடைய கையை அவன் விட்டதையும் கவனிக்கவில்லை. கருணாகரன் அவளைதான் பார்த்து கொண்டு இருந்தான் அச்சு அசலாக தன்னுடைய தங்கை போல இருக்கும் அவளை இன்னொரு பெண் என்று அவனால் சொல்ல முடியவில்லை. அவள் அரண்மனைக்குள் நுழையும் போது அவளை ரகசியமாக கவனித்த கண்களுக்கு சொந்தகாரன் இவன்தான். பெற்றவர்கள் பேராசை பிடித்து பெற்ற மகளை கொன்ற போதும் கருணாகரன் அவள் மீது வைத்த அன்பு உண்மைதான். கருணாகரன் சித்ராங்கதாக்கு அப்படி ஒரு கொடுமை நடக்கும்போது அவள் அருகில் இல்லை இருந்திருந்தால் அவளை எப்படியும் காப்பாற்றி இருப்பான் தன்னுடைய தங்கயை கொன்றவர்களை பழிவாங்க தக்க சமயம் எதிர்பார்த்து காத்து இருக்கிறான் கருணாகரன். அவன் இதற்கு முன்பு இவர்களை கொல்ல முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போனது எனவே அவர்களுக்கு தன்மீது சந்தேகம் வராதவகையில் அவர்கள் வாழ்க்கையை முடித்துவைக்க நினைத்தான். அவன் தன்னுடைய தங்கை மரணத்திற்கு காரணமான எல்லோரும் தன்னுடைய மரணத்துக்கு முன்பு மரணிக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். அப்படி இருக்க அவனுடைய தங்கையே நேரில் வந்தது போல் இருக்கும் வாசுகியை பார்த்து ஒருகணம் திகைத்துதான் போனான் தன்னுடைய அதிகாரம் கொண்டு விசாரித்து வாசுகியை கொல்ல போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டான். எனவேதான் அவளை காப்பாற்றுவதற்காக இப்படி யாருக்கும் தெரியாமல் வந்து விட்டான்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Donde viven las historias. Descúbrelo ahora