❣️❣️❣️அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம்
தவிர எதுவும் இல்லையே அன்பே❣️❣️❣️வாசுகி எப்படி அரண்மனைக்கு செல்ல என்று யோசனை செய்து கொண்டிருக்க யாரோ ஒருவர் வந்து தன் பெயரை சொல்வதை கேட்டு வெளியே வந்து பார்த்தாள்.
பாட்டி :மகளே வாசுகி இவர் அடிகளின் சீடன் உன்னை அழைத்து செல்ல வந்து இருக்கிறார்.
வாசுகி சீடனை பார்க்க அவன் இவளுக்கு வணக்கம் சொல்லி அடிகள் அவருக்கு உதவிகள் செய்ய அழைத்து இருப்பதாக சொன்னான். வாசுகியும் வருவதாக சொன்னாள்.வீட்டில் இருந்த எல்லோரிடமும் சொல்லிவிட்டு அவளும் அந்த சீடன் உடன் சென்று விட்டாள்.வாசுகி சென்று சீடன் இருக்க சொன்ன இடத்தில் அமர்ந்து இருந்தாள்.அந்த இடம் மிகவும் எளிமையாக இருந்தது
வாசுகி (m.v):இந்த ஊருல இவ்ளோ மதிப்பு இருக்கு இவருக்கு ஆனா இந்த இடம் அமைதியா எளிமையா இருக்கு நம்ம காலமா இருந்தா இங்க கதையே வேற. சரி விடு வாசு அந்த காலத்து அரசியல் எல்லாம் இப்போ எதுக்கு. ஆமா நம்மள வர சொல்லிட்டு அவர் எங்க போனாரு
அடிகள் :தாமதம் ஆகிவிட்டது.மகளே உனக்கு ஏதும் சிரமம் இல்லையே
வாசுகி எழுந்து வணக்கம் சொன்னாள்.
வாசுகி :இல்லை அடிகளே. என்னை இந்த இடத்தில் நாள் முழுவதும் இருக்க சொன்னாலும் இருப்பேன். அவ்வளவு அமைதியாக உள்ளது
அடிகள் :உன்னுடைய மனதிற்கு அமைதி தான் தேவை படுகிறது இல்லையா மகளே
வாசுகி என்ன சொல்லவென்று தெரியாமல் சிரித்தாள்
அடிகள் :புன்னகை தான் பதிலா
வாசுகி :உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் அடிகளே.
அடிகள் :எனக்காக நீ அரண்மனைக்கு செல்ல வேண்டும். அந்த அரண்மனை முழுவதும் இந்த கலசத்தில் உள்ள நீரை உன் கரங்களால் தெளிக்க வேண்டும். மகளே உனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லையே
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...