💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே நான்
பட்டாம் பூச்சி ஆவதா
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔கண்களை மூடி கொண்டு நின்றிருந்த சேதுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போனது. எதற்கு இனிமேல் வாழ வேண்டும் என் ஒருவனை மட்டுமே உலகமாக கொண்டிருந்தவள் சென்ற பிறகு நான் ஏன் இங்கு வாழ வேண்டும். என்று மனதிற்குள் நினைத்தவன் அந்த வெள்ளத்தின் வேகத்திலேயே சென்று விட்டால் என்ன படுகின்றன வேதனையாவது குறையும் என்று முடிவு செய்ததான்.
பிறகு கண்களை திறந்து பார்த்தான் சுற்றி பறந்த பறவைகள் தெளிந்த வானம் பசுமையான மரங்கள் என்று மனதிற்கு மகிழ்ச்சி தரும் காட்சிகள் எல்லாம் அவனுக்கு வெறுமையை மட்டுமே கொடுத்தது.அவனுக்கு அந்த நொடி வேதனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது பெற்றவர் மற்றவர் என்று யாரும் நினைவில் இல்லை எல்லாருக்கும் தான் இல்லை என்றாலும் ஒரு வாழ்க்கை உண்டு என்று தான் நினைத்தான். குதிக்கலாம் என்று கண்ணை மூடி தயார் ஆனவன் விழிகளில் தாரகை முகத்திற்கு பதிலாக இப்போது வாசுகியின் முகம் வந்தது. சட்டென்று கண்ணை திறந்தவன் அப்படியே பின்னே வந்தான்.
சேது : என்ன காரியம் செய்ய பார்த்தேன் என்னவள் மீது கொண்ட நேசம் அவளுக்கு நான் கொடுத்த வாக்கையும் நான் என் கடமையையும் மறக்க செய்து விட்டதே. நான் இல்லாமல் போனால் யாருக்கும் அவ்வளவு பெரிய பாதிப்பு இருக்காது ஆனால் வாசுகி அவர் என்ன செய்வார். காலம் கடந்து வந்திருக்கும் அவருக்கு ஒரு துன்பம் வந்தால் காக்க என் நண்பன் வருவான் என்று அவர் என்னை எதிர்பார்பார் நான் இல்லாமல் போனால் அவரை யார் பாதுகாப்பது.நேசிக்க மன்னர் இருந்தாலும் மன்னருக்கு அவரின் விருப்பம் என்பதை தாண்டி நாடு தானே முக்கியம். எனவே நான் தான் செல்ல வேண்டும். வாசுகி நீங்கள் எங்கு இருந்தாலும் உங்களை காப்பது என் கடமை. என் இறுதி மூச்சு வரை என் பணி இனி உங்களை பாதுகாப்பது மட்டும் தான்.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...