சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -44

1.1K 59 101
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ஆருத்ரன் பயிற்சி முடித்துவிட்டு குளித்துவிட்டு வரும்போது நள்ளிரவு ஆகி இருந்தது.ஆறி போயிருந்த உணவை பார்த்தான் சாப்பிடவே அவனுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை இருந்தாலும் அந்த சாப்பாடை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். ஒரு வழியாக சாப்பிட்டு முடிக்க பணியாட்களை அழைக்க அவர்கள் பா
த்திரங்களை எடுத்துகொண்டு சென்று விட்டார்கள். ஆருத்ரன் வானத்தில் தெரியும் நிலவை பார்த்து பெருமூச்சு விட்டான்.

ஆருத்ரன் : நீங்கள் இல்லாமல் இன்று நிலவின் அழகை கூட ரசிக்க முடியவில்லை வாசுகி. நிலவினை பார்க்காமல் இருண்ட வானத்தை தான் பார்க்கிறேன்.உங்களைவிட்டு பிரிந்திருப்பது எவ்வளவு வேதனையாக இருக்கிறது. உங்கள் உடன் எப்போதும் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இதுதான் காதலா இப்படிதான் இருக்குமா. சேர்ந்திருக்கும்போது அளவிட முடியாத
இன்பத்தையும் பிரிகின்ற போது அளவிட முடியாத துன்பத்தையும் கொடுக்கிறது. சமயத்தில் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நடுவில் நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது. இப்படி தனிமையில் புலம்பவும் வைக்கிறது.மொத்தத்தில் பித்து பிடிக்க வைக்கிறது. காத்திருத்தலின் கொடுமை என்ன என்பதை நான் இப்போதுதான் உணர்கிறேன். பொறுமை என்பது நிச்சயம் எனக்கு இல்லை வாசுகி. போர் விரைவில் முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.போர் முடிந்த அன்றே உங்களை திருமணம் செய்து கொள்வேன். அதன்பிறகு என்ன ஆனாலும் நான் உங்களைவிட்டு பிரிந்திருக்க மாட்டேன். நாம் வாழும் வாழ்க்கையில் நீயும் நானும் நம் பிள்ளைகளும் இணைந்துதான் இருப்போம் எப்போதும்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Tahanan ng mga kuwento. Tumuklas ngayon