❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்
மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்
தடைகள் எதையும் மகனே வென்று வா
தலையை நிமிர்ந்து பகையை கொன்று வா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆருத்ரன் கண்கள் கலங்கி நின்று கொண்டு இருந்தான் இத்தனை நாள் தான் யாரை தாய் என்று மனதார நினைத்து வாய் நிறைய அழைத்தானோ அந்த தாய் தன்னை ஒரு புல் அளவுக்கு கூட நேசிக்கவில்லை அதோடு தன்னுடைய பெற்றோர் மறைய காரணம் அவள்தான் என்று தெரிந்து கொண்ட பிறகு மொத்தமாக உடைந்து போனான். அவன் விழியில் வழியும் ஒவ்வொரு துளி கண்ணீரும் அவன் வேதனையை பிரதிபலித்தது. சக்கரவர்த்தி அண்ணன் நிலைமையை நினைத்து மிகவும் வேதனை பட்டான். மீனாட்சி கையும் களவுமாக மாட்டி கொண்டோமே என்று நினைத்து பயந்தாள்.
அங்கே அறையில் அமைதி பெரும் அமைதி நிலவிகொண்டு இருந்தது ஆனால் அங்கே இருந்த எல்லோர் மனதில் பெரிய போராட்டமே நடந்து கொண்டு இருந்தது அங்கு நிம்மதியாக இருந்த ஒரே ஆள் உத்தமன் மட்டும் தான் .ஆருத்ரனுக்கு அந்த இடத்தில் நிற்பது என்பதே நெருப்பில் நிற்பது போல் இருந்தது.அந்த நெருப்பை உண்டாக்கியது மீனாட்சிதான். ஆனால் நெருப்பை சிறு கனல் கொண்டு உருவாக்கினோம் என்பதற்காக அதன் விளைவும் சிறு கனல் போல் இருக்க வேண்டும் என்று இல்லையே. மீனாட்சி தீயை ஏற்படுத்திய கனல் போல் இருக்க ஆருத்ரன் பற்றி எரியும் கானகமாக நின்று கொண்டு இருந்தான். அவனால் கொஞ்சம் கூட தாங்கி கொள்ள முடியவில்லை மீனாட்சியின் துரோகத்தை .
மீனாட்சி கொஞ்சம் தன்னுடைய நாடகத்தை நடித்து காட்டலாம் என்று நினைத்தார்.
மீனாட்சி :ஐயோ மகனே நீ எப்படி இங்கே வந்தாய். ஆமாம் ஏன் அப்படி நிற்கிறாய். வாசல் வழி வந்து இருக்கலாமே. களைத்து இருக்கிறாயே. நாங்கள் பேசியது எதுவும் உண்மை இல்லை நான் உன்னை வெறுப்பேன் என்று நீ நினைத்து விட்டாயா. இந்த தாயின் மீது நீ வைத்து இருக்கும் நம்பிக்கை அவ்வளவு தானா. நான் சக்கரவர்த்தியை சோதித்து பார்த்தேன் அவன் உனக்கு உண்மையாக பாசம் தான் காட்டுகிறானா என்று(me: அதாவது இதுக்கு பேர்தான் முழுசா நனைந்த பிறகு முக்காடுன்னு ). இப்போது தெரிகிறது அவன் உன்மீது உண்மையான பாசம் தான் காட்டுகிறான். நீ வா உட்கார் நான் உனக்கு சாப்பிட எதாவது கொண்டு வர சொல்கிறேன்.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...