❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
புலிகள் அழுவது
ஏது அட பறவையும்
அழ அறியாது
போா்களம் நீ
புகும்போது முள்
தைப்பது கால் அறியாது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆருத்ரன் வீரர்கள் முன்பு நின்றான்.எல்லோரும் அவனைதான் பார்த்து கொண்டிருந்தார்கள்
ஆருத்ரன் : கடல் போல் திரண்டு இருக்கும் வீரர்களே. நம்முடைய பலம் நம்முடைய எதிரியின் பலத்திற்கு கொஞ்சம் கூட குறைவானது அல்ல.ஆனால் நாம் நம்முடைய வீரத்தின் மீது கர்வம் கொண்டு நம்முடைய எதிரியின் படையை குறைவாக நினைக்க கூடாது. நாம் அவர்களை விட படையில் குறைவாக இருந்த போதும் எப்படி உறுதியுடன் இருந்தோமோ அதே போல் உறுதி உடன் இருக்கவேண்டும். அந்த சித்திரசேனின் தலை மண்ணில் உருள வேண்டும் அவன் கோட்டையில் நம்முடைய கொடி பறக்கவேண்டும். அதுவரை போர் நமக்கு சாதகமாக வந்தாலும் வாகை சூடிவிட்டோம் என்று நினைக்க கூடாது. அந்த உமா மகேஸ்வரன் மகன் அழகன் நம்மை என்றும் காக்கும் குறிஞ்சி நில தலைவன் வேலன் நமக்கு துணை நிற்பான். வெற்றிவேல்
வீரர்கள் எல்லாம் சேர்ந்து வீரவேல்என்று கத்தினார்கள்.அதேநேரம் சித்திரசேனன் அங்கே வீரர்கள் முன்பு நின்று கொண்டு இருந்தான்
சித்திரசேனன் : வீரர்களே நாம் வென்று விடுவோம் என்று அஞ்சி அந்த ஆருத்ர ஆதித்ய சந்திர சேகரன் போருக்கு முன்பே சதி செய்தான் இதுவே நாம் வெற்றி அடைய போகிறோம் என்பதை குறிக்கிறது. எதிரி கொள்ளும் அச்சமே நாம் வெற்றி பெற போகிறோம் என்பதை குறிக்கிறது. வாகை சூடபோவது நாம் தான் அதில் எனக்கு சந்தேகம் இல்லை ஆனால் நமக்கு வெற்றி மட்டும் போதாது அதையும் தாண்டி இங்கிருக்கும் ஒவ்வொரு வீரனும் எதிரிகளின் தலையை கொய்ய வேண்டும். உருண்டடும் அந்த தலைகள் எல்லாம் நம்முடைய யானைகள் விளையாட பந்துகள் ஆகட்டும் அந்த உடல்கள் எல்லாம் நம் களிறுகளுக்கு மிதியடி ஆகட்டும். அவர்களுக்கு மட்டும்தான் சதி செய்ய தெரியுமா. நமக்கும் தெரியும் அதை போர் நடைபெறும் போது உணர்வார்கள் அவர்கள். நினைவில் நிறுத்துங்கள் அறம் நமக்கு வெற்றி தராது அறிவுதான் வெற்றியை தரும். ம்ம்ம் நேரம் வந்துவிட்டது எல்லோரும் போருக்கு தயார் ஆகுங்கள். வெற்றி நமதே. மலைகளின் அரசன் அந்த முருகன் நமக்கு துணை நிற்பான் வெற்றி வேல்
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...