சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -19

1.1K 55 8
                                    

❣️❣️❣️❣️தேசாதி தேசம் வர திறிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல ❣️❣️❣️❣️

ஏக கடுப்பில் மீனாட்சியின் அறைக்குள் நுழைந்தாள் வாசுகி. அந்த அறையில் மீனாட்சி தவிர யாரும் இல்லை. வாசுகியை பசியில் இருக்கும் புலி தன்
இரையை பார்ப்பது போல பார்க்க வாசுகி என்ன செய்ய போறாங்களோ என்று அவரை பார்த்தாள்.

மீனாட்சி :பெரியவர்களை பார்த்தால் வணங்க வேண்டும் என்பது கூட உனக்கு தெரியாதா

வாசுகி யாரேனும் வருகிறார்களா என்று வெளியே பார்த்தாள். இது மீனாட்சிக்கு இன்னும் கோபத்தை வரவழைத்தது.

மீனாட்சி :வாசுகி என்ன செய்கிறாய். உன் கண் முன்னே அமர்ந்து இருக்கும் நான் இந்த நாட்டு மன்னன் ஆருத்ர ஆதித்ய சந்திர சேகரனின் சிற்றன்னை. நான் வணக்கத்திற்குரியவள் என்னை வணங்கு. உனக்கு மன்னன் ஆணை மறந்து விட்டதா என்ன. எனக்கு நீ சேவை செய்ய வேண்டும்.

வாசுகி :என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்

மீனாட்சி :சொன்னது கேட்கவில்லையா.என் பாதங்களை தொட்டு வணங்கு

வாசுகி :உங்கள் பாதங்களையா

மீனாட்சி :ஆம்

வாசுகி :நிச்சயமாக உங்கள் உங்கள் பாதங்களை தொட்டு நான் வணங்குகிறேன்.

என்று கூறிய வாசுகி அவருடைய பாதங்களை தொட்டு வணங்கினாள்.
இதை பார்த்த மீனாட்சிக்கும் மனதில் அவ்வளவு மகிழ்ச்சி.

வாசுகி என்று முதல் நாள் என்னுடைய அடிமையாக உன்னை என் என் பாதங்ககளில் விழ வைத்தேன் இதுபோல தான் இனியும் நடக்கும். நீ வாழ்வதை வெறுக்க போகின்றாய் உன்னை நரகத்திற்கு இறப்பதற்கு முன்பாகவே நான் அழைத்து செல்ல போகிறேன் எனவே அனைத்திற்கும் தயாராக இரு வாசுகி. என்று தன் மனதில் நினைத்தவர். அவளை எழுந்திருக்க சொன்னார் .

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now