❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️நன்றாக உறங்கி எழுந்தவள் கண்ணை திறந்து பார்த்தாள். அந்த அறையில் யாருமில்லாமல் போக சரி கிளம்பலாம் என்று இவள் எழுந்திருக்க ஆருத்ரன் உள்ளே நுழைந்தான்.
ஆருத்ரன் :சொல்லாமல் எங்கு செல்கிறீர்கள். அன்று போல் சொல்லாமல் சென்று விட்டேன் என்று நினைத்தீர்களா.
வாசுகி :இல்லை நீங்கள் தானே சொன்னீர்கள் எங்கு நான் பாதுகாப்பக இருப்பேனோ அங்கு என்னை விட்டு சென்று விடுவீர்கள் என்று. இது நீங்கள் பணி புரியும் அரண்மனை அதனால் இங்கு என்னை தனியாக விட்டு சென்று இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
ஆருத்ரன் :நீங்கள் கூறுவது உண்மைதான் இங்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று விட்டு சென்று இருக்கலாம் ஆனால் எனக்கு செல்ல தோன்றவில்லை அதனால் தான் இங்கேயே இருந்து விட்டேன்
அவனை தொடர்ந்து வந்த சில வேலை ஆட்கள் உணவுகளை வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
வாசுகி :உணவு நேரம் வந்து விட்டதா. அப்படி என்றால் நான் செல்லும் நேரமும் வந்து விட்டது. உங்கள் உதவிக்கு நன்றி. ஆஹ் கையில் இருந்த நாணயங்கள் தொலைத்து விட்டேன் அதனால் என்னால் உங்களுக்கு எதுவும் தர இயலாது என்னை மன்னித்து விடுங்கள்.
ஆருத்ரன் :நீங்கள் நினைத்தால் எனக்கு ஒன்றை தரலாம்..
வாசுகி :என்னால் முடியும் என்றால் தருவதில் எனக்கு பிரச்சனை இல்லை
ஆருத்ரன் :எனில் விலைமதிக்க முடியாத உங்கள் நேரத்தை இன்னும் சிறிது நேரம் என்னுடன் செலவு செய்யுங்கள்.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...