❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விழி அசைவில்
வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
தூக்கி செல்ல
கட்டளைகள் விதித்தாய்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சித்திரசேனன் முகம் ரத்தவெள்ளத்தில் இருக்க அவன் மனம் நெருப்பாக எரிந்தது
சித்திரசேனன் : வீரர்களே இந்த பிணங்களை எடுத்து சென்று எங்கேனும் கழுகுகளுக்கு இரையாக போடுங்கள். இவர்களின் உறவினர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணத்தை விட மேலான தண்டனை கிடைக்க வேண்டும் அவர்களின் நிலங்களை அபகரித்து விடுங்கள். அவர்கள் வாழ்க்கையில் இனி மூன்றுவேளை உணவு என்பது கனவாக போகட்டும் அனுதினமும் பசியில் மரணிக்காமல் மரண வேதனை அனுபவிக்கட்டும்.எதிர்த்து கேட்பவர்கள் யாராயினும் அவர்களை உயிரோடு மண்ணில் புதைத்து விடுங்கள். அதற்கு முன்னால் அவர்களின் குடும்பத்தை அவர்கள் கண்கள் முன்பே அளித்து விடுங்கள்.மரணம் ஒரு வேதனை என்றால் குடும்பத்தின் கோர மரணத்தை பார்ப்பது இன்னொரு வேதனை. இனி இவவிருவரின் குலத்தை சார்ந்த ஒவ்வொருவருக்கும் வாழும் போதும் நரகம் வாழ்க்கை முடியும் போது நரகம். நிம்மதி என்பது இருக்க கூடாது அவர்கள் வாழ்வில். இந்த சித்திரசேனன் விருப்பத்திற்கு மாறாக நடப்பவர் நிலை என்ன என்பது எல்லோருக்கும் புரிய வேண்டும் கனவிலும் என்னை எதிர்க்க துணிவு வர கூடாது. அரண்மனை முழுவதும் சென்று தேடுங்கள் இந்த மதிக்கெட்டவர்கள் அந்த அம்புகளை எங்கே மறைத்து வைத்து இருக்கிறார்கள் என்று தேடி கண்டுபிடித்து கொண்டு வாருங்கள்.
என்று சொன்னவன் அப்படியே அங்கிருந்து சென்று விட்டான். அவனுக்கு இரு உயிர்கள் நம்மால் இல்லாமல் போய் விட்டதே என்ற கவலை கொஞ்சம் கூட இல்ல தான் நினைத்தால் எத்தனை உயிரை வேண்டும் என்றாலும் எடுப்பேன் என்னும் கர்வம் மட்டும்தான் இருந்தது. பெற்ற மகளுக்கு காட்டாத அக்கறையா இந்த முதியவருக்கும் இளைஞன்க்கும் காட்டிவிட போகிறார்கள்.
சில மணிநேரத்துக்கு முன்பாக அந்த முதியவர் அம்பை கொடுக்க சொன்னது உண்மைதான் ஆனால் அவர் கொடுத்தது சாதாரண அம்புகளைதான். அவர்கள் அந்த விஷ
அம்புகளை கோவிலுக்கு பின்னால் ஒளித்து வைத்து விட்டார்கள். நீரில் போட முடியாது நீர் விஷமாகிவிடும். நெருப்பில் போட முடியாது அந்த புகை காற்றில் கலந்தால் அதை சுவாசிப்பவர் உயிர் போய் விடும். எனவே நீருக்கும் நெருப்புக்கும் அந்த அம்புகளை கொடுக்காமல் அவர்கள் அங்கிருந்த கோவிலின் நிலத்தில் அந்த அம்புகளை புதைத்து விட்டார்கள். அவர்கள் அதோடு பிரச்சனை முடிந்து விட்டதாக நினைத்து விட்டார்கள். ஆனால் ஏற்கனவே தீட்டிய திட்டம் நிறைவேறாமல் போனதை நினைத்து கடுப்பில் வந்த சித்திரசேனன் அந்த அம்புகளைதான் பார்த்தான் ஒரு திட்டம் தோல்வி அடைந்து இருந்தாலும் மிகவும் வலிமையான ஆயுதம் நம்முடைய கையில் உள்ளே என்று மகிழ்ச்சி அடைந்தான் சித்திரசேனன் ஆனால் அவன் மகிழ்ச்சி உடனடியாக கோபமாக மாறியது தன்னுடைய வேலை ஆளிடம் அந்த அம்பை எடுத்து வர சொல்ல அவர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்ததால் அதில் ஒரு அம்பு அவன் காலில் செங்குதாக விழுந்து நேராக இறங்கியது. சித்திரசேனன் ஒரு அம்பு வீணாக போனதே என்று நினைத்து முடிப்பதற்குள் அவன் மனதில் மின்னல் போல் தோன்றியது அந்த எண்ணம் அது என்ன என்றால் அந்த அம்பு பட்டால் உடனே மரணம் அடைவார்கள் அதுதான் அந்த அம்பின் மகிமை அப்படி இருக்க அம்பு நேராக அவன் காலில் இறங்கிய பிறகும் அவன் எப்படி உயிரோடு இருக்கிறான் என்று ஆச்சர்யம் அடைந்தான். அவனிடம் இருந்த மிச்சம் அம்புகளை பார்த்தவனுக்கு சந்தேகம் தோன்றியது. எனவே அந்த பெரியவரையும் இளைஞனையும் அழைத்து வர சொன்னான். வீரர்கள் அவர்களை அழைத்து வந்தார்கள். நடக்க போவது தங்களுக்கு நிச்சயம் நல்லதாக இருக்க போவது இல்லை என்று உணர்ந்தார்களோ என்னவோ சித்திரசேனன் அழைத்த போதே அவர்களுக்கு பயம் வர ஆரம்பித்து விட்டது. அவர்கள் நடுகத்தை மறைக்க நினைத்து சித்திரசேனன் முன்பு நின்றார்கள் சித்திரசேனன் இதயம் இல்லாதவன் மூளை இல்லாதவன் இல்லை அல்லவா அவன் அனுபவம் அவன் முன்பு நிற்பவர்களின் நடுகத்தை நொடியில் கண்டு பிடித்து விட்டான்
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...