சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -4❣️

1.2K 68 46
                                    

கோவிலுக்கு இருவரும் புறப்பட்டு சென்றனர். வாசுகியை கடந்து செல்பவர்கள் அனைவரும் அவளை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டுதான் சென்றனர். வாசுகி இதை கவனிக்கதான் செய்தாள் இருப்பினும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவள் கவனம் எல்லாம் அந்த ஊரின் அழகில்தான் இருந்தது ஏனெனில் எல்லாம் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. இவள் கடந்து செல்லும் பாதை எல்லாம் மகிழ்ச்சி மட்டுமே தென்பட்டது. பறவைகள் எழுப்பும் ஒலியும் விளையாடி மகிழும் சிறுவர்ளின் சிரிப்பும் அந்த இடத்தின் தோற்றமும் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சியை அவளுக்கு தந்தது. இதை எல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாகவே வந்து கொண்டு இருந்தாள்.எதுவும் பேசவில்லை. தன்னுடைய பரப்பரப்பான வாழ்க்கையையும் இங்கு உள்ள வாழ்க்கையையும் எண்ணி பார்த்துக்கொண்டு மௌனமாக  வந்தாள்.
.உமையாள்தான் மௌனத்தை கலைத்தாள்.

உமையாள் :என்ன  யோசனை

சிறுவாசுகி :நமக்கென்று ஒரு அடையாளம் இருக்க அதை விடுத்து இன்னொரு அடையாளம்  தேடி சென்றால் நாம் எத்தனை உயரத்தினை அடைந்தாலும் நம்முடைய சிறப்பினை தொலைத்து அடிமைகள் மட்டுமே ஆகி விடுகிறோம்.

உமையாள் :வார்த்தைகளின் அர்த்தங்கள் என்ன என்று விளங்கவில்லை எனக்கு.யாருடைய அடையாளம் யார் தொலைத்தது

சிறுவாசுகி :அது அவ்வளவு முக்கியமில்லை விட்டுவிடு. கோவில் எங்கே இருக்கிறது.

உமையாள் :அருகில் வந்து விட்டோம்.

சிறுவாசுகி அந்த கோவிலை  பிரமிப்புடன் பார்த்தாள். மிகவும் உயரமாக மிகவும் அழகாக இருந்தது
நம்ம தஞ்சாவூர் கோவில் மாதிரி வச்சிக்கோங்க மக்களே மாதிரி தான் அதே கோவில் இல்லை.

சிறுவாசுகி (m.v):இவ்ளோ அழகான கோவில நம்ம எப்படி பாக்காம இருந்துருப்போம்ன்னு தெரியலயே. எந்த புக்லயும் இத பத்தி படிச்சது இல்லையே. ஒருவேளை படை எடுப்புல அழிஞ்சு இருக்குமோ.

உமையாள் :மீண்டும் என்ன சிந்தனை

சிறுவாசுகி :இந்த கோவிலின் அழகினை பற்றி எண்ணினேன்

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now