❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கண்ணாடி என்றும்
உடைந்தாலும் கூட பிம்பங்கள்
காட்டும் பார்க்கின்றேன்
புயல்
போன பின்னும் புது பூக்கள்
பூக்கும் இளவேனில் வரை
நான் இருக்கின்றேன்
முகமூடி அணிகின்ற
உலகிது உன் முகம் என்று
ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே
அட விழுந்தாலுமே
அந்த
நிலவென்றும் நனையாதே
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாசுகியும் ஆருத்ரனும் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள். ஆருத்ரன் வாசுகியின் கழுத்தில் அவன் முகத்தை புதைத்துக் கொண்டு இருந்தான்.நொடிகள் கடந்து நிமிடங்களாக மாறின ஆனாலும் அவனுடைய அணைப்பு நொடிக்கு நொடி இறுகியதே தவிர கொஞ்சம் கூட குறையவில்லை.வாசகி அவன் கையில் ஏதோ பொம்மைபோல் நின்று கொண்டு இருந்தாள்.
கொஞ்சம் நேரம் கழித்து ஆருத்ரன் வாசுகியை விட்டு விலகி நின்றான்.
அவனால் வாசுகியின் முகத்தை பார்க்கவே முடியவில்லை அவனுக்கு ஏதோ குற்ற உணர்ச்சியாக இருந்தது. தோற்கக்கூடாத ஒரு போரில் தோற்று விட்டு தேசத்தை இழந்து மக்கள் முன்பு நிற்பதுபோல் வாசுகி முன்பு நின்று கொண்டு இருந்தான். அவன் அப்படி தலை குனிந்து நிற்பதை பார்த்த வாசுகிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.அவளுக்கு அவனிடம் என்ன பேச வேண்டும் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று தெரியவில்லை.அவனுடைய சோகம் அவளை பேச விடாமல் செய்தது போல் இருந்தது வாசுகிக்கு. கொஞ்ச நேரம் அப்படியே அவனை பார்த்துக் கொண்டு இருந்தவள் தான் இப்படி மௌனமாக இருந்தால் அவனுக்கு இன்னும் வேதனை அதிகமாகும் என்பதை உணர்ந்து பேச ஆரம்பித்தாள்.வாசுகி : ஏன் இப்படி செய்யாத தவறுக்கு நீங்கள் உங்களையே காயப்படுத்தி கொள்கிறீர்கள்
ஆருத்ரன் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ நிலத்தில் அவள் முகம் இருப்பதுபோல நிலத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவனை பார்த்த வாசுகி அவன் அருகில் நெருங்கி வந்து நின்றாள். பிறகு பிறகு தன்னுடைய கைகளைக் கொண்டு அவனுடைய முகத்தை தன்னை பார்க்கும்படி செய்தாள்.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...