❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும் என் ஆவி
நீராவியாய் என்னை நீ மோதினாய்
உன் பார்வையில் ஈரம் உண்டாக்கினாய்
நீ தொட தொட நானும் பூவாய் மலர்ந்தேன்
நான் என் பெண்மையின் வாசம் உணர்ந்தேன்
நீ அருகில் வர வர ஆவல் அறிந்தேன்
நான் என் ஆண்மையின் காவல் துறந்தேன்
முன் ஜென்மம் எல்லாம் பொய் என்று நினைத்தேன்
உன் கண்ணை பார்த்தேன் மெய் தானடா
உருவங்கள் எல்லாம் உடல் விட்டு போகும்
உள்ளத்தின் காதல் சாகாதடி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஆருத்ரன் அறையில் இருந்து வெளியே வந்த வாசுகி பணிபெண்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள். அந்த குறுவாளை யாரும் பார்க்காத படி மறைத்து வைத்து விட்டு உறங்கி விட்டாள். அடுத்தநாள் அழகாக விடிந்தது. இன்று அரண்மனை விட்டு செல்ல வேண்டும் என்பதால் ஆருத்ரனிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று தேட அவன்தான் அரண்மனைக்கு திரும்ப வரவில்லையே.அரண்மனையில் அவன் இல்லாததை தெரிந்து கொண்டு வாசுகிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது சரி கிளம்பலாம் என்று நினைத்து விட்டு அவள் மந்திரியாரிடம் சொல்லவதற்காக அந்தபுரத்தை விட்டு வெளியே வர அப்போது தமயந்தி வந்தாள்.அவளை பார்க்கும் போதே தெரிந்தது வேகமாக ஓடி வந்து இருக்கிறாள் என்று அவளுக்கு மூச்சு வாங்கியது.
வாசுகி :என்ன ஆயிற்று ஏன் நீங்கள் இவ்வாறு ஓடி வந்துருக்கிறீர்கள்.
தமயந்தி :உங்களை காணதான் நான் வந்தேன்
வாசுகி :நீங்கள் அழைத்து இருந்தால் நானே வந்து இருப்பேனே
தமயந்தி :வார்த்தைகள் தான் கேட்க இனிமையாக உள்ளன. ஆனால் நீங்கள் என்னிடம் சொல்லாமல் சென்று விடலாம் என்று நினைத்தீர்கள் தானே
வாசுகி :அப்படி எல்லாம் இல்லை. நான் அது ஏதோ
தமயந்தி :தடுமாற்றம் வேண்டாம் உங்களுக்கு என்னை பார்க்க வர நேரம் இல்லை என்றால் என்ன நான் உங்களை காண வந்து விட்டேன். இங்கு என்ன என்னவோ நடந்து விட்டது வாசுகி இந்த அரண்மனையில் பல குழப்பங்கள் வெளியே சிறு சிறு பூசல்கள் எல்லாம் நடக்கிறது. அத்தையார் எப்போதும் கம்பீரமாக இருப்பவர் அவரும் சோர்ந்து போய் அறைக்குள் முடங்கி விட்டார்.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...