❣️❣️❣️ என்னை விட்டுப் போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன் கோபக் குயிலே
பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடிப்போனேன்
நீயில்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே❣️❣️❣️ஆருத்ரன் சென்றது அறியாமல் இவள் மன்னனை தேட அங்கே அவள் பார்த்தது என்னவோ சித்திரசேனனைதான்
வாசுகி (m.v):இந்த உமையாள் கொடுத்த பில்டப்க்கு நல்ல தெய்வீக முகமா இருப்பாருன்னு பாத்தா இவர் என்ன டோராபுஜ்ஜில வர்ற குள்ள நரி மாதிரி இருக்காரு. சரி சரி வாசு நம்ம இப்படி நினைக்கிறது தப்பு. அவரு அவ்ளோ நல்லவரா இருக்காரு மக்கள் மேல பாசமா இருக்காரு. நம்ம போய் அவருக்கு நன்றி சொல்லுவோம் (me:வாசு ஓடிரு )
இவள் ஆருத்ர ஆதித்ய சந்திர சேகரன் என்று நினைத்து கொண்டு சித்திரசேனன் நோக்கி செல்ல நல்லவேளை உமையாள் வந்து விட்டாள்.
உமையாள் :வாசுகி எங்கு செல்கின்றீர்கள்
வாசுகி :மன்னரை பார்க்கதான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் அதான் செல்கிறேன்
உமையாள் :ஆனால் அவர் நம் மன்னர் அல்ல அவர் சித்திரதேசத்துமன்னர் சித்திரசேனன்
வாசுகி :ஓ
உமையாள் :அன்னை வந்து விட்டார்கள் வாருங்கள் நாம் வீட்டுக்கு செல்வோம்.
வாசுகி :ம்ம்ம் சரி
அவர்கள் இருவரும் அந்த இடத்தை விட்டு செல்ல காலத்தின் விளையாட்டு சித்திரதேசத்து மன்னன் வாசுகியை பார்த்து விட்டான். ஆனால் கூட்டத்தில் அவள்தான் சென்று விட்டாளே . அவனுக்கு இப்போது தான் பார்த்தது கனவா நினைவா. அவன் உதடுகள் அவனையும் அறியாமல் சித்ராங்கதா என்னும் பெயரினை உச்சரித்தது. இப்பொழுது எதுவும் செய்ய முடியாத நிலையில் நின்று கொண்டு இருந்தான். கோவிலை விட்டு வெளியேறியவன் வெளியே செல்ல தன்னுடைய நாட்டுக்கு செல்ல ஆயத்தம் ஆனவன் பாதி தூரம் சென்றவன் இப்போது படையை அனுப்பி விட்டு காட்டிற்குள் நின்று கொண்டு இருந்தான் ஒரு பழைய மாளிகைக்குள். அங்கு மீனாட்சியும் வந்து சேர்ந்தார்.
VOUS LISEZ
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...