❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
கானல் நீரில்மீன் பிடிக்க கைகள்நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே
வேடிக்கை பார்க்கிறதே❣️❣️❣️❣️❣️சித்திரசேனன் நடப்பதெல்லாம் சரியாகஇல்லாமல் இருக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசனையில் இருந்தான். இங்கு சேதுபதி வாசுகியை எழுப்பி கொண்டு இருந்தான்.
சேதுபதி :வாசுகி எழுந்திருங்கள். இல்லம் அருகில் வந்து விட்டது
வாசுகி கண்களை திறந்து பார்த்தாள்.கிட்ட தட்ட இருட்ட ஆரம்பித்து இருந்தது.
வாசுகி :ஓ நம்ம வந்துட்டோமா. ஹையோ தூக்கம் போகலேயே அங்க போனா தூங்க விட மாட்டாங்களே. சேது இங்க பாருங்க. நம்ம உங்க மன்னர பாத்தது பேசுனது யாருக்கும் தெரிய வேண்டாம்.நான் வேண்டும் என்றால் உமையாளிடம் மட்டும் சொல்லி கொள்கிறேன்
சேதுபதி தலையை மட்டும் ஆட்டினான் இருவரும் வீட்டுக்குள் சென்றனர். அவர்கள் இருவரும் ஜோடியாக வருவதை பார்க்க அவ்வளவு பொருத்தமாக இருந்தது சேதுவின் குடும்பத்தின் கண்களுக்கு. வாசுகியும் சேதுவும் இவர்கள் எண்ண ஓட்டத்தை அறியவில்லை. வாசுகி சென்று குளித்து விட்டு வந்து அமர்ந்தாள். பெரியவர்கள் எல்லாம் வெளியே இவர்கள் திருமணம் மற்றும் உமையாள் திருமணம் பற்றி பேசி கொண்டு இருக்க அது எதுவும் தெரியாமல் வாசுகி உமையாள் உடன் பேசி கொண்டு இருந்தாள்.
வாசுகி :உமையாள் உனக்கு ஒன்று தெரியுமா.
உமையாள் :என்னவென்று சொன்னால் தெரிந்து கொள்வேன்
வாசுகி :நான் இன்று உங்கள் மன்னரை பார்த்தேன்
உமையாள் :அப்படியா. நான் கூறியது போல இருந்தாரா. உங்களை அவர் பார்த்தாரா. ஏதேனும் பேச வாய்ப்பு கிடைத்ததா
வாசுகி :உண்மையை கூற வேண்டும் என்றால். அவரிடம் அதிகம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது ஆனால் மன்னனாக பேசியதை காட்டிலும் அவரிடம் மருத்துவர பேசியது தான் பிடித்தது.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...