💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாரலே
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔எதிர்த்து வருகின்ற யானையை நோக்கி வேகமாக ஓடினான் சேதுபதி அவன் கண்களில் பயம் என்பது துளி கூட இல்லை அதன் துதிகையில் இருந்த ஆயுதத்தின் மீதும் அதன் வேகத்தின் மீது மட்டும்தான் அவன் கவனம் இருந்தது. அதற்கு அருகில் சென்ற போது சட்டென்று பக்கவாட்டு பக்கம் சென்றவன் அதனுடைய கண்ணை நோக்கி ஈட்டியை வீச குறி தவறாமல் அதன் கண்ணில் பட யானை அப்படியே வலியில் பிளிறி முன்னங்காலை மேலே தூக்கியது அதன் துதிக்கையில் இருந்த முறம் போன்ற ஈட்டி சற்று தொலைவில் சென்று விழுந்தது.அந்த யானை மீது இருந்த வீரன் தடுமாறி கீழே விழுந்தான். யானை இன்னும் ஆக்ரோசம் ஆக அதன் முன்னங்ககால் நிலத்தில் வைக்க இன்னொரு ஈட்டியை அதன் கழுத்தை பார்த்து எறிந்தான் அது சரியாக அதன் கழுத்தில் பட்டு ரத்தம் கொட்ட மொத்தமாக நிலை தடுமாறி நிலத்தில் சரிந்தது. அந்த யானை உயிருக்கு போராட சேதுவை நோக்கி இன்னொரு வீரன் தாக்கவர . வந்த வீரன் தன்னை நோக்கி வீசிய வாள் தன் மீது படாதவாறு தப்பித்தவன் இன்னொரு வீரன் மீது இருந்த வாள் ஒன்றை எடுத்து அந்த வீரன் மீது எறிய சேதுவால் தாக்கபட்ட வீரனும் இறந்தான் அவனால் தாக்கபட்ட யானையும் இறந்தது. தன்னால் இறந்த உயிர் பற்றி அவனுக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை அவனை பொறுத்தவரை இப்போது அவன் தன்னுடைய நாட்டுக்காக போருக்கு வந்த வீரன் அப்படி இருக்கும் போது அவனால் யாருக்கும் இரக்கம் காட்ட முடியாது. அவனுக்கு தேவை எல்லாம் எதிரிகளின் மரணம் மட்டும் தான்.தன்னுடைய ஈட்டியை வேகமாக எடுத்தவன் எதிர்த்து வருபவர்கள் எல்லாரையும் கொல்லும் நோக்கில் முன்னேற ஆரம்பித்தான்.
போர்க்களம் இரக்கம் என்பது இல்லாமல் வெற்றி என்பதை மட்டும் இலக்காக மாற்றி கொண்டு இருந்தது
9 நாட்கள் கழித்து
வாசுகி அப்போதுதான் கண்களை திறந்து பார்த்தாள் அவள் எதிரில் அடிகள் இருந்தாள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கடைசியாக மீனாட்சியை பார்த்ததும் தான் சித்ராங்கதாவிடம் வேண்டி கொண்டதும்தான் நினைவுக்கு வந்தது அவளுக்கு வேறு எதுவும் நியாபகம் வரவில்லை.அவளுக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது.
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...