சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -5

1.2K 61 44
                                    

❣️மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன❣️

குதிரையில் இருந்து இறங்கியவன் இவளின் நிலை கண்டே ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்தான். முகம் கண்டு ஒருவரின் நிலை அறிய முடியவில்லை என்றால் மன்னவாக இருப்பதில் அர்த்தம் இல்லையே. ஆம் வந்தது வந்தது மின்னவன் ஆருத்ர ஆதித்ய சந்திர சேகரன் தான். இவனை கண்டு அல்ல குதிரை கண்டு பயத்தில் இருந்தவளுக்கு பேச்சு வரவில்லை சிறுவன் இருந்த இடத்தை பார்க்க அவளின் பார்யை செல்லும் இடத்தை பார்த்தவன் அப்போதுதான் உணர்ந்தான் பிரச்சனை என்ன என்பதை.

வேகமாக சிறுவனிடம் சென்றவன் அடிப்பட்டு தணுத்திருந்த அவன் தேகத்தினை பார்த்தான். முதலில் குதிரையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்தவன் சிறுவனுக்கு முகத்தில் தெளித்தான் லேசாக மயக்கம் தெளிந்த சிறுவனுக்கு தண்ணீரை குடிக்க கொடுத்தான் வாசுகி வந்து சிறுவன் அருகில் அமர்ந்து அவனை பிடித்துக்கொண்டாள்.தண்ணீரை கொடுத்தவன் சுற்றி முற்றிலும் பார்த்து விட்டு அருகில் இருந்த சில செடிகளில் இருந்து இலைகளை கொண்டு வந்தவன் அதனை கசக்கி சாறினை உடலில் பூசினான் சிறுவன் இன்னும் அரை மயக்கத்தில் இருப்பதால் அவன் அமைதியாகதான் இருந்தான் வாசுகிதான் ஒவ்வொரு முறை மருந்து சாறினை தடவும் பொழுதும் ஸ்ஸ்ஸ் என்று ஏதோ அவளுக்கு மருந்து போடுவது போல செய்து கொண்டு இருந்தாள். அதை அவனும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். சிறுவனுக்கு மருந்து அளித்துவிட்டு இவளை பார்த்தான். இப்போது ஓரளவுக்கு படபடப்பு குறைந்திருந்த வாசுகி பேச ஆரம்பித்தாள்.

வாசுகி :முதலில் மன்னிக்க வேண்டுகிறேன். பிறகு உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.

ஆருத்ரன் :உங்கள் நன்றி மன்னிப்பு எல்லாம் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் எனக்கு தெரிய வேண்டியது ஒன்று உள்ளது

வாசுகி :என்ன தெரிய வேண்டும்

ஆருத்ரன் :இந்த சிறுவனின் இந்த நிலைக்கு யார் காரணம்

வாசுகி :நிறைய பேர் காரணம் சரியாக சொல்ல வேண்டும் என்றால் முட்டாள் தனமான நம்பிக்கைதான் காரணம்

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now