❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிழல் தரும் இவள்
பாா்வை வழி எங்கும் இனி
தேவை உயிரே உயிரே உயிா்
நீதான் என்றால்
உடனே வருவாய்
உடல் சாகும் முன்னால்
அனலின்றி குளிா் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
இதில் நீ மட்டும்
வேண்டும் பெண்ணே
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாசுகி வீட்டுக்கு வந்து விட்டாள். சேதுபதி மூகையனை அடித்து துவைத்தது நன்றாக வேலை பார்த்தது அதனால் வாய் ஒழுங்காக இல்லாத காரணத்தால் ஒழுங்காக மன்னிப்பு கேட்க முடியவில்லை என்றாலும் மூக்கையன் ஓரளவுக்கு வாசுகிக்கு புரியும் விதத்தில் மன்னிப்பு கேட்டான்.
வாசுகியும் அவனை மன்னிப்பு கேட்டு விட்டான் என்றும் அதோடு சேதுபதி ஏற்கனவே தண்டனை கொடுத்து விட்டான் என்பதால் அவளும் மன்னித்து விட்டுவிட்டாள்.வாசுகிக்கு வீட்டுக்கு வந்ததில் இருந்து ஏதோ ஒன்று தவறாக நடந்தது போல் இருந்தது. ஏன் என்றால் உமையாள் முகம் வாடி இருந்தது . அவள் வாசுகியிடம் நன்றாக பேசினாலும் அவள் முகத்தில் வேதனை இருந்தது அதை வாசுகியால் உணர முடிந்தது. அதனால் அவளை தனியாக அழைத்துசென்று பேசினாள் முதலில் உமையாள் சொல்ல மறுத்தாள். ஆனால் வாசுகி கொஞ்சம் நேரம் கேட்டபிறகு நடந்த உண்மையை சொன்னாள். அவள் விருப்பப்பட்ட வாழ்க்கை கிடைக்கிற நேரத்தில் வேண்டும் என்றே மூக்கையன் குழப்பம் ஏற்படுத்தி எல்லாவற்றையும் கெடுத்து விட்டதை சொன்னாள். அவளிடம் தான் எல்லாவற்றையும் பார்த்து கொள்வதாக வாசுகி ஆறுதல் சொல்லி உமையாளை உறங்க வைத்தாள். வழக்கம் போல் இரவு நேரம் சேதுபதி உறங்கவில்லை வாசுகி அவன் இருக்கும் இடத்தை தேடி சென்றாள்.
வாசுகி வந்ததை பார்த்ததும் அவள் பக்கம் திரும்பினான்.என்ன என்பது போல் கண்களால் கேட்டான்
வாசுகி : அது சேது நான் உங்களிடம் உமையாள் பற்றி பேச வேண்டும். என்னதான் இருந்தாலும் இதை பற்றி பெரியவர்களிடம்தான் பேச வேண்டும். ஆனாலும் நான் உங்களிடம் தான் பேசமுடியும். அது உமையாள்
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...