சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -24

1K 58 13
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ரத்தத்தால் செந்நிறத்தில் மாறி இருந்த
அந்த சிறையை பார்த்தான் ஆருத்ரன். குதிரம் என்பது அவனுக்கு புதிதானது அல்ல ஆனால் இன்று அவன் பார்க்கும் இந்த ரத்தம் அவனுக்கு கோபத்தை தான் ஏற்படுத்தியது. அவன் கோபம் மந்திரியும் அறிந்ததால் அவருக்கு உள்ளுக்குள் நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது.அவன் மௌனம் அந்த பதட்டத்தை இன்னும் அதிகம் ஆக்கியது.

மந்திரி :மன்னா

ஆருத்ரன் :எப்படி நடந்தது எப்பொழுது நடந்தது.

மந்திரி :சிறிது நேரத்திற்கு முன்பாகதான் அரசே. எனக்கு செய்தி கிடைத்ததும் உங்களை நான் அழைத்து வந்து விட்டேன்

ஆருத்ரன் அந்த பிணங்களை பார்த்தான் பிடித்து வந்த அனைத்து  வீரர்களும் மிகவும் கொடூரமாக இறந்து கிடந்தார்கள் . அவர்கள் ரத்தம் தான் இப்பொழுது அந்த சிறைசாலையில் முழுவதும் இருக்கிறது. சிலரின் தலை உடைக்க பட்டு கண்கள் வெளியேறி தாடைகள் உடைந்து  பற்கள் சிதறி  கொடூரமாக இறந்து கிடந்தார்கள்.

ஆருத்ரன் :இங்கு காவல் காத்து கொண்டு இருந்த அனைவரும் இப்பொழுதே என் கண் முன்பு வாருங்கள்.

சிறை காவலர்கள் அனைவரும் வந்தார்கள்

ஆருத்ரன் :நீங்கள் இத்தனை பேர் இங்கு இருக்கும் பொழுது எப்படி இது நடந்து.

தலைமை காவலன் :அரசே திடீர் என்று இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அவர்களே தாக்கி கொண்டார்கள். சுவர் மீது தங்களை தாங்களே மோதி கொண்டார்கள் நாங்கள் தடுக்க முயற்சி செய்யும் முன்னரே அவர்கள் இறந்து விட்டார்கள். அவர்கள் நோக்கம் இறக்க வேண்டும் என்பதாக இருந்ததால் அவர்கள் மரணத்தை எங்களால் தடுக்க இயலவில்லை அரசே.

ஆருத்ரன் :நம்மிடம் இருந்த ஆதாரம் இவர்கள் தான். இனி என்ன செய்வது.
இவர்கள் போன்ற கோழைகளை அனுப்பியது யாராக இருந்தாலும் எந்த மன்னனாக இருந்தாலும்  நிச்சயம் அவர்களும் கோழைகளாகதான் இருப்பார்கள் . இந்த கோழைகளால் என்றும் நேருக்கு நேர் நம்மை எதிர்க்க முடியாது ஆனால் இவர்கள் ஆபத்தானவர்கள். இந்த கோழைகளின் பிணங்கள் என்னுடைய நாட்டில் இனி இருக்க கூடாது. இவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை நடக்க கூடாது. மரணத்தை விரும்பி ஏற்ற இந்த கோழைகளின் ஆன்மா இந்த உலகை விட்டு செல்லாமல் இங்கேயே அலைந்து திரிய வேண்டும். இந்த ரத்த கறை துடைத்த துணிகள் கூட இங்கு இருக்க கூடாது. இந்த பிணங்களை நடு கடலில் சென்று போட்டு விடுங்கள். இவர்கள் அங்கே உள்ள மீன்களுக்கு இரையாக போகட்டும்.அதற்கு மட்டும் தான் இவர்கள் தகுதி ஆனவர்கள்.
என் சிற்றப்பனார் உடல் தீக்கு இரையாகும்  முன்னர் இவர்களின் உடல் மீன்களுக்கு இரையாகி இருக்க வேண்டும்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now