சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -25

1.1K 56 46
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா...
இந்த வைகையில் வைத்திடு கை

பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்...

ஓர் இலக்கியம் நம் காதல் ...
வான் உள்ள வரை வாழும் பாடல்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அவள் அவனை விலக்கவும் இல்லை விலகி கொள்ளவும் இல்லை. அவனை அழ விட்டு விட்டாள். மன்னனின் வேதனையும் என்பதை தாண்டி மங்கையவள் அவன் அணைப்பில் வேறு எதையோ உணர்ந்தாள். அது அவள் மீது அவன் வைத்து இருக்கும் காதல் அல்ல அவன் மீது தான் வைத்திருக்கும் காதல் என்பதை அவள் உணர்ந்து இருந்தால் நன்றாக இருந்துருக்கும். சிறிது நேரம் கழித்து அவன் அவளை விட்டு விலகி நின்றான்.அவன் எதுவும் பேசவில்லை. அவளும் பேசவில்லை. சரி மௌனத்தை கலைக்க நினைத்து வாசுகி தான் முதலில் பேச ஆரம்பித்தாள்.

வாசுகி :ஏன் அமைதியாக இருக்கின்றீர்கள். உங்கள் கண்ணீர் உங்கள் பாரத்தை குறைத்ததா அரசே. எத்தனை நாட்கள் வேதனை இவை.எதற்காக வேதனையை மறைத்து வைக்கிறீர்கள்.

ஆருத்ரன் :நான் மனம் உடைந்தது தெரிந்தால் என்னை சார்ந்தவர்களும் உடைந்து விடுவார்கள் அதனால் என்னால் யாரிடமும் என் நிலையை கூற இயலவில்லை.என்னால் அழவும் முடியவில்லை ஆனால் உங்கள் முன்பாக நான் உண்மையாக இருக்கிறேன் என்று எனக்கு தோன்றுகிறது. நான் உடைந்தால் மனம் வருந்தினால் நீங்கள் என்னை தேற்றுவிடுவீர்கள் என்று தோன்றுகிறது. நான் மன்னனாக உங்கள் முன் இருந்த போதும் மருத்துவன் ஆதித்யனாக இருந்த போதும் என்னுடன் நீங்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கிறீர்கள்.

வாசுகி :அது என் சுபாவம்.எங்கள் ஊரில் சொல்வார்கள் நல்லவர்கள் கண்ணீர் நிலத்தில் விழ கூடாது என்று உங்கள் கண்ணீர் என்னை தான் நனைத்தது அதனால் நான் புனிதம் அடைந்தது போல உணர்கிறேன்.அரசே உங்களுக்கு இவ்வளவு வேதனை மனதில் இருந்தும் ஏன் மறைத்து வைக்க பார்க்கிறீர்கள்.வேதனையை சேகரித்து வைப்பதால் பயன் தான் என்ன.இனி நீங்கள் என்று வேதனையாக இருந்தாலும் இன்பமாக இருந்தாலும் சரி என்னுடன் பேசுங்கள் நீங்கள் கூறுவதை கேட்க நான் இந்த மண்ணில் வாழும் வரை இருப்பேன்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Donde viven las historias. Descúbrelo ahora