சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -34

1K 53 0
                                    

💓💓💓💓💓💓💓💓💓💓💓❤❤❤

வருவது
வருவது வருவது
துணையா சுமையா
தருவது தருவது தருவது
சுகமா வலியா

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

வாசுகியால் ஆருத்ரன் இதய துடிப்பை நன்றாக கேட்க முடிந்தது.அவளுக்கு அவன் இதயதுடிப்பு மெல்லிய இசை போல இருந்தது. இருவருக்கும் விலக வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஆருத்ரன் அவள் முகத்தை உயர்த்தி தன்னை பார்க்க வைத்தான்.

ஆருத்ரன் :உங்களுக்கு ஏதும் துன்பம் நேரவில்லையே

வாசுகி :வேதனைகள் அதிகம் அனுபவித்தேன் உங்களை பார்க்கும் முன்பாக ஆனால் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீஙகள் என்னை தேடி இவ்வளவு தூரம் வந்துருக்கிறீர்களே உங்களுக்கு வழியில் ஏதேனும் துன்பங்கள் ஏற்பட்டதா

ஆருத்ரன் :இல்லை நான் உங்களை காண முடியவில்லை என்றுதான் வேதனை கொண்டேன் ஆனால் உங்களை கண்ட பிறகு எனக்கும் மகிழ்ச்சி அதிகமாகிவிட்டது.

வாசுகி :எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை நான் எப்படியும் அவர்களிடம் சிக்கி மரணித்து விடுவேன் என்று நினைத்தேன் ஆனால்

ஆருத்ரன் :அப்படி பேசாதீர்கள் வாசுகி. உங்களிடம் நான்தான் கூறினேனே உங்களை நான் நாட்டைவிட்டு எங்கும் செல்ல விடமாட்டேன் என்று மீறி வந்துவிட்டால் விட்டுவிடுவேனா நீங்கள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் இந்த ஆருத்ரன் நிச்சயம் வருவான். உங்களை பிரிந்து அவன் இருக்க மாட்டான்

அப்போது சட்டென்று ஆருத்ரனுக்கு அந்த பெண்கள் சொன்னது நினைவுக்கு வந்தது ஆனால் வாசுகியின் அணைப்பே அவனுக்கு உண்மை என்ன என்று சொல்லி விட்டதே இருந்தாலும் கேட்டு தெளிவு படுத்திக்கொள்வோம் என்று நினைத்து கொண்டான்

ஆருத்ரன் :உங்களுக்கு யாருடனாவது திருமணம் நிச்சயிக்க பட்டிருந்ததா

வாசுகி அவன் சொன்னதை கேட்டு குழம்பியவள் பிறகு புரிந்து கொண்டாள் அவள் அன்று சொன்ன கதைதான் அவன் காதுகளுக்கு சென்றிருக்கும் என்று

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now