சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -7

1.1K 62 43
                                    

கோவிலில் எல்லாரும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். சிலருக்கு வயித்தெரிச்சல் இருந்தது ஆனால் அது யாரின் மகிழ்ச்சியையும் கெடுக்கவில்லை. பூஜை எல்லாம் முடித்துவிட்டு இவர்கள் எல்லாம் இறைவனை கும்பிட்டுவிட்டு வந்தார்கள்.

சேதுபதி :மகிழ்ச்சி தானே

வாசுகி :மிக்க மகிழ்ச்சி. என்னுடைய மகிழ்ச்சிக்கு நீங்களும் காரணம் அதனால் நன்றி

சேதுபதி :உங்கள் விருப்பத்தினை நிறைவேற்றுவது என் கடமை

வாசுகி அவனை பார்த்து லேசாக புன்னகை செய்தாள்

வாசுகி :ஒன்று உங்களிடம் கேட்கலாமா

சேதுபதி :கேளுங்கள்

வாசுகி :இல்லை உங்கள் மன்னரை நீங்கள் பார்ப்பீர்களா

சேதுபதி :எப்பொழுதும் இல்லை எப்போதாவது  பார்ப்பதுண்டு.

வாசுகி :உங்கள் மன்னரை என்னால் பார்க்க முடியுமா

சேதுபதி :எங்கள் மன்னரை பார்க்க இப்பொழுது அரண்மனைக்குதான்  செல்ல வேண்டும்

வாசுகி :என்னை அழைத்து செல்வீர்களா உங்கள் மன்னரை பார்க்க

சேதுபதி :அதற்கு  அவசியம் ஏற்படாது . மன்னர் இந்த கோவிலுக்கு அவசியம் வருவார் அப்போது பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி அவர் வரும்போது  உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் நான் நிச்சயம்  அழைத்து செல்கிறேன். இது நான் உங்களுக்கு அளிக்கும் வாக்கு.

வாசுகி :மீண்டும் நன்றி 😁.

உமையாள் :வாசுகி வாருங்கள் இப்பொழுது நாம் செல்லும் நேரம் வந்து விட்டது.

வாசுகி :செல்லலாம். நீங்கள் வரவில்லையா

என்று சேதுவை பார்த்து  கேட்டாள்.

சேதுபதி :எனக்கு இங்கு பணி இருக்கின்றது. நீங்கள் செல்லுங்கள்  நான் பணி முடித்துவிட்டு வருவேன்.

வாசுகி :அப்படி என்றால் நீங்கள் வந்ததும் பேசலாம்.

அவனும் சரி என்பது போல் தலை ஆட்டிவிட்டு சென்றாள் வாசுகி. செல்லும் போது அந்த சிறுவனிடம் பேசிவிட்டு அவர்கள் குடும்பத்திடம் விடைபெற்றுக்கொண்டு வாசுகி உமையாள் குடும்பத்துடன் சென்று விட்டாள்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Tempat cerita menjadi hidup. Temukan sekarang