கதாபாத்திங்கள் விளக்கம் - புதிய கதை அறிவிப்பு

954 32 41
                                    

வணக்கம் மக்களே ஓகே நான் இன்னும் 9 பாகத்துல கதை முடிக்க போறேன். அது உங்களுக்கும் தெரியும்.அதனால இதுவரைக்கும் இந்த கதை எப்படி எழுதுன. ஒவ்வொரு கதாபாத்திரம் எப்படி உருவாகுனன்னு பாப்போம். அப்புறம் எனக்கு சொல்ல நேரம் கிடைக்காமல் உங்களுக்கு படிக்க நேரம் கிடைக்காமல் போகலாம் இல்லையா அதான் இந்த அப்டேட். முதல்ல வாசுகிகிட்ட இருந்து ஆரம்பிப்போம்.

1.வாசுகி - அவங்களுக்கு டைரக்டர் ஆகணும்னு தான் ஆசை. நான் ஏன் அப்படி எழுதினேன்னா எனக்கு அப்போ பெண் இயக்குனர்கள் நிறைய பேர் எடுத்த நிறைய படம் எனக்கு பிடிச்சிச்சு. சில்லுகருப்பட்டி. அந்த டைம்ல சூரரைபோற்று ட்ரைலர் தினமும் பாத்துட்டு இருந்த அதனாலதான் அப்படி பண்ண. அதோட ஒருத்தங்க டைரக்டர் ஆகணும்ன்னு ஆசை பட்டா நிச்சயம் வசனங்கள் நல்லா பேசுவாங்க. அதனால வாசுகி பழைய காலத்துக்கு போனப்போ கூட அவளால கொஞ்சம் சமாளிக்க முடிஞ்சுது. இந்த கதாபாத்திரம் பேர் சிறு வாசுகி. என்கிட்ட ஒரு பாப்பா சொல்லிச்சு அக்கா முன்னாடி என் பேர் சிறுவாசுகி அந்த பேர் பிடிக்கல அதான் நான் இப்போ என்னோட பேர் சங்கீதான்னு மாத்திட்டேன் சொன்னா. எனக்கு என்னவோ அந்த பேர் ரொம்ப பிடிச்சிச்சு. அப்போ யாருக்குள் இங்கு யாரோ எழுதிட்டு இருந்த. அடுத்து என்ன கதை எழுதுனாலும் கதாநாயகி சிறுவாசுகிதான் முடிவு பண்ணி தான் வச்சேன்.

2. ஆருத்ர ஆதித்ய சந்திர சேகரன் - கதாநாயகனுக்கு பேரே கதை எழுத ஆரம்பிச்சபிறகு தான் வச்சேன். என்கிட்ட வாசகர் ஒருத்தர் கூட சொல்லி இருந்தார் என்ன அபி ஹீரோ பேர் வக்கலயான்னு. அதான் உண்மை அப்போ பேரே வைக்கல. அப்புறம் வழக்கம் போல நான் சாமி கும்பிட்டுட்டு இருக்குறப்போ சந்திரசேகரன் அப்படிங்கிற பேர் காதுல விழுந்துச்சு அது சிவன் பெயர். ஆருத்ரன் ஆதித்யன் முன்னாடி யோசிச்ச பேர் அதை எல்லாம் சேர்த்து ஆருத்ர ஆதித்ய சந்திர சேகரன்னு வச்சேன். அவருக்கு அவரோட மக்கள்தான் முக்கியம்
அவர் மேல உண்மையா அன்பு வைக்கிறவங்களுக்கு என்ன வேணா பண்ணுவாரு அந்த மாதிரிதான் இவரும்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now