சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -43

1K 58 78
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மலரும் பொழுதும்
ஒரு போராட்டம்
உதிரும் பொழுதும்
ஒரு போராட்டம்
நடுவில் நடுவில்
சிறு கொண்டாட்டம்
முடிவில் முடிவில்
வெறும் ஏமாற்றம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ஆருத்ரன் மந்திரி மற்றும் சக்கரவர்த்தி உடன் அடிகளை காண சென்றான். அவர்கள் சென்று அடிகளுக்காக காத்திருக்க கொஞ்சம் நேரத்தில் அடிகள் வந்தார். அவரை பார்த்ததும் வணங்கியவன் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அவரை பெற்றுகொள்ள சொல்லி கேட்க அடிகள் சிறு புன்னகையுடன் அதனை ஏற்றுகொண்டார். பிறகு அவர் அமர்ந்து மூவரையும் அமர சொன்னார். ஆருத்ரன் பேச ஆரம்பித்தான்.

ஆருத்ரன் : அடிகளே உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை இருந்தாலும் எல்லாம் தெரிந்த இறைவனிடமே இது எனக்கு வேண்டும் என்று கேட்டு பெறும் மனித குலத்தை சேர்ந்தவன் என்பதால் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்

அடிகள் : கேள் மகனே

ஆருத்ரன் : வரப்போவது மாபெரும் யுத்தம் என்பதை அறிவேன்  நான்.அப்படி இருக்கும்போது அந்த யுத்தத்திற்கு செல்வதற்கு முன்பு உங்களிடம் நர்ச்சொல் கேட்க விரும்புகிறேன். நீங்கள் தான் நர்ச்சொல் கூறி இந்த போருக்கு நல்ல மனநிலையில் நாங்கள் தயாராக உதவி செய்ய வேண்டும்.

அடிகள் ஆருத்ரனை பார்த்து அமைதியாக புன்னகை செய்தார். பிறகு பேச ஆரம்பித்தார்

அடிகள் : மன்னா உனக்கும் உன்னை சார்ந்தவர்க்கும் உன் மக்களுக்கும் இந்த போர் மிக முக்கியமானதாகும். இந்த போருக்கு பிறகு பல மாற்றங்கள் உண்டாகும். இது உயிர்களை எடுத்து முடிவினை கொடுக்கும் போர் அல்ல. மடிகின்ற உயிரை ஆதாரமாக்கி புது தொடக்கம் உருவாக்கும் போர். காலம்தான் உன்னை இதுவரை அழைத்து வந்து இருக்கிறது. இனியும் அந்த காலமே உன்னை செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்து செல்லும்.அறம் எவன் பக்கம் உள்ளதோ அவனுக்குதான் அரியசானம் கிட்டும்.

என்று சொன்ன அடிகள் அழகன் முருகன் பாதத்தில் இருந்து ஒரு பூவை எடுத்து கொடுத்தார்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Tahanan ng mga kuwento. Tumuklas ngayon