❣️❣️❣️❣️நறுமுகையே நறுமுககையேநீயொரு நாழிகை நில்லாய். செங்கனிஊறிய வாய்திறந்து நீயொரு திருமொழி
சொல்லாய்.அற்றைத்திங்கள்
அந்நிவலில் கொற்றப்பொய்கை ஆடுகையில்ஒற்றை பார்வை பார்த்தவனும்
நீயா❣️❣️❣️❣️அவர்கள் இருவரும் அப்படியே நிற்க சிலை ஆகிவிட்டார்களா என்ற குழப்பத்தில் இளமாறன் கனைத்தது. அந்த கனைப்பு சத்தத்தில் நிஜ உலகிற்கு வந்தவர்கள் சற்று விலகி நின்றார்கள். மௌனத்தை கலைத்தது ஆருத்ரன் தான்.
ஆருத்ரன் :இக்கானகத்தில் இச்சமயத்தில் தாங்கள் தனியாக என்ன செய்கின்றீர்கள்
வாசுகி :கானகத்தில் இருக்கும் கனிகள் மிகவும் சுவையாக இருக்கும் என்று பறிக்க வந்தேன். உடன் யாரும் வந்தால் அவர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டுமே என்று நினைத்து தனியாக வந்தேன். வேறு ஒன்றுமில்லை
ஆருத்ரன் :நீங்கள் சொல்லுகின்ற சுவை நிறைந்த பழங்கள் எல்லாம் இந்த பள்ளத்தில் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை உங்களுக்கு அப்படி தெரிகின்றதா
என்று கொஞ்சம் நக்கலாக கேட்டான் (me:நடு காட்டுல என்ன நக்கல் வேண்டி கிடக்கு மன்னா )
வாசுகி அதை பார்த்துவிட்டு இவனை பார்த்தாள்.அவள் முகம் வாடி போனது
ஆருத்ரன் :எதற்காக உங்கள் முகம் இப்படி வேதனையை பிரதிபலிக்கின்றது. நான் காய படுத்தும் விதமாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
வாசுகி :இல்லை இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை எல்லாம் என் தவறு நான் இப்படி இருக்க கூடாது. எதிலும் விளையாட்டு இப்போது என்னை உமையாள் தேடிக்கொண்டு இருப்பாள்.அவள் குடும்பத்திற்கு தெரிந்தால் என்னால் அவர்களும் வருத்தம் கொள்வார்கள்
ஏற்கனவே இயலாமையில் இருந்தவளுக்கு இப்போது கண்ணில் கண்ணீர் துளிகள் வந்தது. அவளின் வேதனை அவளை விட இவனை தான் அதிகம் பாதித்தது. அவளுடைய கண்ணீரை துடைக்க எழுந்த கைகளை கட்டுபடுத்தினான். ஆயுதங்களால் சில சமயம் காயங்கள் ஏற்பட்ட போது கூட இவ்வளவு வேதனை உணர்ந்தது இல்லை ஆனால் இன்று அவளின் இருவிழி வழியே வழிகின்ற கண்ணீர் துளிகள் அதிக வேதனை அளிக்கின்றது. (Me:நமக்கு ஒரு கஷ்டம் அப்படின்னு வர்ற வருத்தத்த விட நமக்கு யார பிடிச்சிருக்கோ அவங்களுக்கு கஷ்டம்ன்னா தான் இன்னும் கஷ்டமா இருக்கும் )
YOU ARE READING
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasyஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...