சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -28

1K 54 17
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

பழம் தின்னும் கிளியோ
பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

அடைமழை ஐடி மின்னலுடன் வெளுத்து வாங்கியது.வந்ததில் இருந்து வாசுகி கண்களுக்கு தாரகை தெரியவே இல்லை.இரவு நேரமும் வந்தது அதிகமாக குளிர் அடிக்க ஆரம்பித்தது.திடீர் என்று அந்த குளிர் இன்னும் அதிகமாக மாறி உறைய வைக்கும் அளவுக்கு குளிர் எடுக்க ஆரம்பித்தது

வாசுகி (m. v): அடடா நம்ம பிள்ளை அவளோட வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டா போல. எதுக்கு இவ்ளோ பில்டப் பன்றா வாசுகி நான் வந்துட்டேன் சொன்னா நானே எழுந்துருப்பேன். சரி எங்க இருக்கான்னு தெரியலயே நம்ம தேடுவோம் எப்படியும் எல்லாரையும் தூங்க வைச்சு இருப்பா நம்ம போய் அவகிட்ட ஜாலியா பேசுவோம்.

என்று எழுந்தவள் அறையை விட்டு வெளியே போக முற்பட அவளுடைய கால் தடுக்கி விட்டது.

வாசுகி (m. v):அடடா என்ன இது எழுந்த உடனே தடுக்குது நல்லவேளை கீழ விழல இந்த பாவாடையால விழுந்து வாரி இருப்பேன்

என்று மனதிற்குள் நினைத்தவள் வெளியே வந்தாள். நடு கூடத்தில் யாரும் இல்லை ஏன் தாரகை கூட அவள் கண்களுக்கு தெரியவில்லை ஆனால் வாசலில் யாரோ அமர்ந்து இருப்பது போல் இருந்தது. அவளுக்கு வாசல் பக்கம் போக மிகவும் பயமாக இருந்தது. ஆனால் அங்கே அமர்ந்து இருப்பது யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அவளை முன்னேறி போக வைத்தது. ஆனாலும் சேதுபதி சொன்னது நினைவு இருந்ததால் வாசலை தாண்டி செல்ல வேண்டாம் என்று நினைத்து கொண்டாள். அங்கிருந்த விளக்கு ஒன்றை எடுத்து கொண்டு சென்றாள். நெருங்கி செல்ல செல்ல தான் தெரிந்தது அங்கே அமர்ந்து இருப்பது சேதுபதி என்று அவளுக்கு இருந்த பயம் எல்லாம் பறந்து போனது.அவள் சேதுபதியுடன் பேச வாசலை தாண்டி அவன் அருகில் சென்றாள்.அவன் ஏதோ அதிக யோசனையில் இருப்பது போல் இருந்தது

வாசுகி :என்ன பண்ணுறீங்க சேது இங்கே அமர்ந்து. ஏதோ ஆழமான யோசனை போன்று தெரிகிறதே

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Onde histórias criam vida. Descubra agora