❣️❣️❣️அரசன் வாழ விதி இருக்கு அதற்கு நீதான் விதி விலக்கு❣️❣️❣️வாசுகி :அது அது
ஆருத்ரன் :எது எது.என் கேள்விக்கு பதில் இன்னும் வரவில்லை வாசுகி என் அறையில் என்ன செய்கின்றாய்.
வாசுகி பதில் என்ன சொல்லவென்று தடுமாற அப்பொழுது தான் அவளின் ஓவியத்தை பார்த்தாள்.
வாசுகி :நான் இங்கு வருவதற்கு முன்பாகவே என் ஓவியம் இங்கு வந்து விட்டது போல் தெரிகிறதே அரசே.
என்று அவள் தன்னுடைய ஓவியத்தை சுட்டி காட்ட இந்த முறை சமாளிக்க வேண்டியது ஆருத்ரன் முறை ஆனது .
ஆருத்ரன் :அது அது
வாசுகி :எது எது அரசே
ஆருத்ரன் :இது என்னுடைய அறை இங்கு இருப்பவை எல்லாம் என்னுடயவை.அதை பற்றி கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை.
வாசுகி :ஆனால் உங்கள் அறையில் இருக்கும் ஓவியத்தில் இருப்பது நான் அல்லவா.அதனால் அதை பற்றி கேள்வி எழுப்ப எனக்கு உரிமை உண்டு
ஆருத்ரன் :உன் ஓவியம் நான் வரைந்தது அதில் உனக்கு உரிமை இல்லை. அது எனக்கு தான் சொந்தம். அதை பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்
ஆருத்ரன் இவ்வளவு விளக்கம் கொடுக்க அவசியம் இல்லை இருந்தாலும் அவன் அவளுக்கு விளக்கம் கொடுக்க விரும்பவே செய்தான்.
வாசுகி :எனில் சரி உங்கள் அருமை உரிமை ஓவியம் வரையில் தானா இல்லை எனக்கும் பொருந்துமா
ஆருத்ரன் :என் நாட்டில் நீ இருக்கிறாய் அதனால் மன்னனுக்கு மக்கள் மீது உள்ளது உரிமை இப்போது உன் மீது எனக்கு உள்ளது
வாசுகி :அது சரி ஆனால் நீங்கள் என் மன்னர் இல்லையே
ஆருத்ரன் :நான் உனக்கு மன்னனாக இருக்க விருப்பம் கொள்ளவில்லை வாசுகி.
வாசுகி :அப்படியா மன்னன் இல்லாமல் எனக்கு நீங்கள் யாராக இருப்பீர்கள்.
ஆருத்ரன் அந்த கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை.
ஆருத்ரன் :எவ்வாறு இந்த அறைக்குள் வந்தாய்
KAMU SEDANG MEMBACA
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasiஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...