❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மூச்சிலே தீயுமாய்
நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்
தேசமே உயிா்த்தெழு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாசுகி சேதுவின் கையை பார்க்க அவன் அவளைதான் பார்த்து கொண்டு இருந்த
வாசுகி :என்ன இப்படி ரத்தம் இருக்கு என்ன ஆச்சு சேது
சேதுபதி : இது காயத்தால் இந்த ரத்தம் என் கைகளில் இல்லை வாசுகி. காயம் ஏற்படுத்தியதால் வந்தது.
வாசுகி : என்ன கூறுகிறீர்கள் சேது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சேதுபதி :அது ஒன்றும் இல்லை வாசுகி
வாசுகி : என் மீது ஆணை நீங்கள் என்னிடம் உண்மையை சொல்லுங்கள்
சேதுபதி :என் தோழி என்னுடைய சகோதரிக்கு சமமானவள் சிலநேரம் தாயாகவும் மாறலாம் ஆனால் அவள் என்றும் எனக்கு தாரமாக மாட்டாள். அதை புரியாத சிலர் எங்களுக்குள் இருக்கும் உறவை கொச்சை படுத்தி பேசினால் அவர்களுக்கு நான் கொடுக்கும் சன்மானம் உயிர் போகும் வேதனையாகதான் இருக்கும்.
அவன் சொன்னதை கேட்ட வாசுகிக்கு தன்னை யாரோ தவறாக பேசி இருப்பதால்தான் சேதுபதி அவர்களை அடித்து இருக்கிறான் என்று உணர்ந்து கொண்டாள்.அவளுக்கு வேதனையாகதான் இருந்தது.
வாசுகி : ஏன் சேது எனக்காக நீங்க இவ்ளோ கஷ்ட படறிங்க. நான் உங்களுக்கு என்ன செய்தேன். உங்களுக்கு கவலை மட்டும்தான் கொடுத்திருக்கேன்.
சேதுபதி : உங்கள் கவலையை விட இங்கு யார் கவலையும் பெரிதல்ல வாசுகி. இங்கு வந்த போது முதலில் தாங்கள் பார்த்தது என்னை தானே. எதாவது ஒரு துன்பம் என்றால் இவன் வந்து உதவுவான் என்று நினைத்து இருப்பீர்கள் தானே அந்த நினைப்பை என்றும் நான் பொய்யாக்க மாட்டேன். நீங்கள் உண்மையாக எனக்காக வேதனை படுகிறீர்கள் அன்பு காட்டுகிறீர்கள் வேறு என்ன வேண்டும் எனக்கு
அதோடு என்னவளுக்கு நான் வாக்கு அளித்து இருக்கிறேன் என்ன நடந்தாலும் நான் உங்கள் பக்கம் நிற்பேன் என்று. நான் இல்லாத ஒரு காலத்தில் இருந்து நீங்கள் வந்திருந்தாலும் நான் இருக்கும் காலத்தில் உங்களுக்கு பாதுகாப்பாக நான் இருப்பேன்.
ESTÁS LEYENDO
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
Fantasíaஇந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செ...