சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -32

1.2K 58 32
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤விழி அதில் விழுவேனா
இனி உன்னை விடுவேனா
விரலுடன் அட விரல் கடத்திய
காதல மறப்பேனா
உடன் வருவேனா
உயிர் தொடுவேனா
இலை நுனியில ஒரு துளியென
தவிக்கிறேன் சரிதானா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

வாசுகி அமைதியாக அவர்கள் சொன்ன வழி நடக்க ஆரம்பித்தாள். அந்த வீரர்கள் அவளை ஒரு பெரிய அறையில் விட்டுவிட்டு சென்று விட்டார்கள். வாசுகிக்கு அங்கே நிற்கவே கடுப்பாக இருந்தது. அவளுக்கு இப்போதே அந்த சித்திரசேனனை போட்டு அடித்தே கொல்ல வேண்டும் போன்று இருந்தது ஏன் என்றால் அவன் ஒருவனால் மட்டும் தான் இப்படி எல்லாம் நடந்திருக்கிறது.அப்படி யோசிக்கும் போதே அவளுக்கு கோபம் கோபமாக வந்தது அவளால் அவள் கோபத்தை கட்டுபடுத்த முடியவில்லை.எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அவள் முன்பு வந்து நின்றான் சித்திரசேனன். அவன் இரண்டு புதல்வர்களும் அதை பார்த்த வாசுகிக்கு அதற்கு மேல் பொறுமை என்பதே இல்லாமல் போனது.

சித்திரசேனன் :என் அன்பு மகளே நீ இப்போது எப்படி இருக்கிறாய். உன்னை பார்த்து எத்தனை காலம் ஆகிவிட்டது உன் தகப்பன் நீ இல்லாமல் எவ்வளவு வேதனை படுவான் என்று உனக்கு தெரியாதா

என்று அன்பு சொட்டசொட்ட பேசினான்

வாசுகி (m. v):என்ன இப்படி நடிக்கிறான் இந்த ஆளு அது சரி மீனாட்சி அண்ணன் அப்டித்தான் இருப்பான்.இந்த குடும்பத்துல போயா அந்த பொண்ணு பிறக்கணும் ச்சே

என்று இவள் யோசித்து கொண்டு இருக்க சித்திரசேனன தொடர்ந்து பேசினான்

சித்திரசேனன் :ஏன் அம்மா இப்படி வாடி போய் விட்டாய். உன்னை இந்த நிலையில் பார்க்க எனக்கு எவ்வளவு வேதனையாக இருக்கிறது என்று தெரியுமா. வா மகளே முதலில் இந்த கிழிசல் ஆடையை மாற்றி பட்டாடை உடுத்திக்கொள். பிறகு உனக்காகவே தயார் செய்யபட்டுள்ள உணவுகளை உண்டு பஞ்சு மெத்தையில் நித்திரைக்கொள்.

வாசுகி(m.v): இவன் நமக்கே பாயசம் போடலாம்ன்னு பாக்குறான் வாசு கோபம் மட்டும் பட்டுறாத கொஞ்சம் பொறுமையா இரு

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Where stories live. Discover now