சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -47

1K 61 48
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வேரில் நான்
அழுதேன் என் பூவும்
சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை
முன்நாளில் காதல்
பழக்கமில்லை உனக்கென்றே
உயிர் கொண்டேன் அதில் ஏதும்
மாற்றம் இல்லை பிரிவென்றால்
உறவுண்டு அதனாலே வாட்டம்
இல்லை
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

வாசுகி உமையாளை பார்த்தாள். ஆனால் அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

உமையாள் : வாசுகி நம்முடைய தேசம் வென்று விட்டது

வாசுகி : இதில் நான் மகிழ்ச்சி அடைய எதுவும் இல்லை. எனக்கு தனிமை வேண்டும் என்னை தனியாக இருக்க விடு. எனக்கு உங்களை போன்று பெரிய மனம் எல்லாம் இல்லை. என்னுடைய இதயத்தின் வேதனை கண்ணீராகதான் வரும் அந்த கண்ணீருக்கு இனி என் வேதனை குறைக்க சக்தி இருக்குமா என்று தெரியாது. வேதனை இல்லாமல் பார்த்து கொண்டவர் தானே இன்று என்னுடைய வேதனைக்கு காரணமாகி விட்டார்.எனக்கு யாரும் வேண்டாம் நான் தனிமையில் இருக்கிறேன்.

உமையாள் : எனக்கு உண்மையில் என்ன சொல்ல என்று கூட தெரியவில்லை வாசுகி. கண்ணீர் இல்லை என்பதற்காக வேதனை இல்லை என்று அல்ல தமையன் வீரமரரணம் அடைந்துள்ளார். அதை நினைத்து பெருமைதான் படவேண்டும் இப்படி அழ கூடாது. உங்களுக்கு தனிமை ஆறுதல் அளிக்கும் என்றால் நான் தனிமை அளிக்கிறேன்

என்று சொல்லிவிட்டு உமையாள் செல்ல அந்த புடவையோடு அப்படியே தரையில் படுத்தாள். கண்ணீர் அவள் வேதனை எப்படியாவது குறைக்க முயற்சி செய்து  கொண்டு இருந்தது. ஆனால் அவள் வேதனை குறையவில்லை. நேரம் ஆனது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் அப்படியே மௌனமாக இருந்தாள். காயங்கள் தரும் வேதனையை தாங்கி கொள்ளலாம் ஆனால் வெறுமை அதை தாங்கி கொள்ளவே முடியாது . சூரியன் மறைந்து இரவு நிலவு வரும் நேரம் வந்தது. வாசுகி அப்போதுதான் அறையை விட்டு வெளியே வந்தாள்.அவளுக்காக உமையாள் காத்து கொண்டு இருந்தாள் சற்று தள்ளி அவள் குடும்பத்தினர் நின்று கொண்டு இருந்தார்கள்.உமையாள் வாசுகியை பார்த்த உடன் அருகில் வந்தாள்

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Donde viven las historias. Descúbrelo ahora