சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் -30

1K 58 18
                                    

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வானம் எங்கும்
உன் பிம்பம் ஆனால்
கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன்
வாசம் வெறும் வாசம்
வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு
கிள்ளி என்னைச் செந்தீயில்
தள்ளி எங்கே சென்றாயோ
கள்ளி ஓயும் ஜீவன் ஓடும்
முன்னே ஓடோடி வா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

சேது ஏதோ நினைவில் நடந்து சென்று கொண்டு இருக்க அவன் நினைவு தாரகையை சந்தித்த அந்த நிகழ்வில் நிலைத்து இருந்தது.

சேது வேகமாக வாசுகியை காப்பாற்ற ஓட அப்போது தாரகை சேதுவின் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தினாள். அவளை பார்த்தவன் அப்படியே நின்றான்.தாத்தா ஏற்கனவே மயங்கி இருந்தார்.அப்பாவை தாரகை மயங்க வைத்தாள் இருவரும் மயங்கி விட்டார்கள்

தன்னுடைய மனைவி தனக்கு எதிரே இருப்பதை பார்த்த சேதுக்கு ஒன்றும் புரியவில்லை ஆனாள் அவள் வந்து விட்டாள் என்று உணரும் போது அவனுக்கு சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

சேது :தாரகை நீ வந்து விட்டாயா. என்னை ஏன் இத்தனை நாட்கள் பிரிந்து இருந்தாய் நீ இல்லாமல் எனக்கு சிரிக்கவே மறந்து விட்டது.

என்று அவள் அருகில் சென்றவன் அவளை தொட போக தாரகை விலகி நின்றாள். அவன் புரியாமல் பார்த்தான்.

தாரகை :தொட்டு பார்க்க என்னிடம் உடல் இல்லை ஐயனே.என்னால் உங்களை உணர முடியும் ஆனால் உங்களால் என்னை உணர முடியாது

சேது :உணராமல் தான் உன் கைகள் பட்டதும் நான் சிலை போல் நின்றேனா. என்னை தடுக்காதே தாரகை

என்று சொன்னவன் அவளை தொட்டு பார்த்தான் தலையை வருடி கொடுத்தான். தாரகை அதிர்ந்தாலும் அமைதியாக நின்றாள்.

சேது :இத்தனை நாள் என்னுடன் தானே இருந்தாய் அப்போது எல்லாம் ஏன் என் முன் தோன்றவில்லை. உன்னை மரணத்திலுருந்து காக்க முடியாத பாவி ஆனதால் இவனை ஏன் பார்க்க வேண்டும் என்று நினைத்தாயோ

தாரகை :இல்லை ஐயனே. நான் என்றும் உங்கள் அருகிலேயே இருக்க விருப்பம் கொண்டேன் அதனால் மட்டுமே நான் உங்கள் கண்களில் படவில்லை. ஆனால் நீங்கள் நம்முடைய வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நானும் உங்களுடன் தான் இருப்பேன். நீங்கள் உறங்காமல் என்னை நினைத்து வேதனை படும் பொழுது எல்லாம் உங்களை தென்றலாக தீண்டி செல்வேன் அப்படி சிறு சிறு தீண்டல்கள் மட்டும் எனக்கு போதுமானதாக இருந்தது அதனால் தான் என் ஆசையை நிறைவேற்றி கொள்ளாமல் நான் நம்முடைய இல்லத்திலேயே ஆன்மாவாக  சுற்றி வந்தேன். ஆனால் இன்று என்னுடைய ஆசையா பிறரின் நலனா என்ற கேள்வி வரும்போது பிறரின் நலன் தான் எனக்கு முக்கியமாக படுகிறது. அதனால் தான் நான் எனக்கு என்று இருந்த எல்லைகளை உடைத்து விட்டு வந்து விட்டேன். நான் உங்களை தடுத்ததில் ஒரு காரணம் இருக்கும் என்று தான் நீங்கள் பொறுமையாக நிற்கிறீர்கள் எனக்கு தெரியும் ஐயனே
நீங்கள் நினைப்பது போல் வாசுகி ஆபத்தில் சிக்கி கொள்ள செல்லவில்லை வாசுகி அவள் வந்த காரணத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள சென்று இருக்கிறாள். அவள் மீண்டும் வரும்போது சிக்கல்கள் அவளுக்கு ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது ஆனால் நீங்கள் அவளை யாருக்காகவும் எப்பொழுதும் விட்டு கொடுக்கவே கூடாது. அவள்தான் இங்கு பலரின் வாழ்வை மாற்றி அமைக்க போகிறாள் விதியால் ஏற்கனவே  எழுதப்பட்ட சில நியதிகளை கயவர்கள் சிலர் மாற்றி அமைக்க நினைத்து சில தீய காரியங்களை செய்தால். விதி தன்னை மாற்றி கொள்ளாமல் இருக்க தன்னால் இயன்றதை செய்யும். ஐயனே நான் உங்களிடம் ஒரு உண்மையை கூறுகிறேன். என்ன ஒழுக்கத்தின் மீது ஆணையிட்டு கூறுகிறேன் இந்த உண்மையை கூறுவதால் வருகின்ற விளைவு எதாயினும் அது என்னை மட்டும் சேரட்டும் அது எத்தனை பெரிய பாவமாக இருந்தாலும் அந்த பாவத்தின் பலன் நான் மண்ணாய் கல்லாய் கட்டெறும்பாய் எதாய் தோன்றினாலும் என்னை மட்டுமே தொடரட்டும் காலத்தின் கட்டளையை மீறிய பாவம் என்னவர் மீது சேர கூடாது. ஐயனே வாசுகி அப்பாவி பெண் அவள் நம்முடைய காலத்தை சேர்ந்தவள் அல்ல அவள் நமக்கு 1000 வருடங்களுக்கு பின்னால் இருந்து வந்தவள்.

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )Donde viven las historias. Descúbrelo ahora